Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி ராசி பலன்: துலாம் .. லட்சியமும் ... ஐப்பசி ராசி பலன்: தனுசு .. நினைத்ததை சாதிப்பதில் உறுதியான நீங்கள் தவறான நட்பை விட்டு விலகுவது நல்லது! ஐப்பசி ராசி பலன்: தனுசு .. நினைத்ததை ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: விருச்சிகம்.. திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு இது விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: விருச்சிகம்.. திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு இது விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும்

பதிவு செய்த நாள்

16 அக்
2026
04:10

விசாகம் 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன குடும்பாதிபதியான குரு, அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் வேலையில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரியின் உத்தரவிற்கேற்ப செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். சிலருக்கு திடீர் இடமாற்றமும் ஏற்படும். குருவின் பார்வைகளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நிம்மதி இருக்கும். தேவையான பணம் வரும். கண் தொடர்பான பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைக்க முடியும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். மனதில் இருந்த பயம் குழப்பம் விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து நகர்வர். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் ஜெயமாகும். ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருப்பதால் நெருக்கடிகள் நீங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமங்கள் விலகும். கவனமாக செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்மையளிக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 30.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 21, 27. நவ. 3, 9, 12.


பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபண நினைத்த வேலைகள் நடந்தேறும்.


அனுஷம்: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். கர்மக்காரகன் சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம், நெருக்கடிகள் நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ஜீவனாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிப்பதால் வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சிலருக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை வரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்பவர்கள் கவனமாக இருப்பதும் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதும் நன்மை அளிக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபட்டிருப்பவர்கள் யோசித்து செயல்படுவது அவசியம். இடம் வீடு என்ற கனவு சிலருக்கு நனவாகும். நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சி செய்தும் விற்க முடியாமல் இருந்த இடத்தையும் விற்க முடியும். கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருந்த கடன்களை அடைக்க முடியும். நவ. 13 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை தடைபட்டுவந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பெண்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளும் குடும்பத்தில் தோன்றிய நெருக்கடியும் இருந்த இடம் தெரியாமல் போகும். தொழில் நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் நிர்வாகத்தின் ஆதரவும் கிடைக்கும். பாக்கிய கேதுவால் பெரியோருடைய ஆதரவும் தெய்வ அருளும் உண்டாகும். தந்தைவழி உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் கவனமாக 

செயல்படுவது அவசியம்.


சந்திராஷ்டமம்: அக். 30, 31.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 26, 27. நவ. 8, 9.


பரிகாரம்: நரசிம்மரை வழிபட தடைகள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.


கேட்டை: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். வித்யாகாரகன் புதன் விரய ஸ்தானத்தில் அக். 31 வரை நீச்சமடைந்திருப்பதால் பொருளாதார நெருக்கடி நீங்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம் காண ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய முதலீடு ஆதாயம் தரும். ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அக். 20 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைக்க முடியும். உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் வீண் செலவு அதிகரிக்கும். ஆடம்பரம் கேளிக்கை என்று சிலர் நிறைய செலவு செய்வீர்கள். என்னதான் முயற்சி செய்தாலும் சேமிப்பில் இருந்து பணம் குறைய வாய்ப்பிருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும், செலவுகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வதால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் போகும். ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் நீச்சம் அடைந்திருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் உங்களுக்கு நன்மையாகும். பெரியோரின் ஆலோசனை கை கொடுக்கும் என்பதால் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடமையில் சரியாக இருப்பதும் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம். விவசாயிகளுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது அவசியம்.


சந்திராஷ்டமம்: அக். 31.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 23, 27. நவ. 5, 9, 14.


பரிகாரம்: வரதராஜப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar