Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி ராசி பலன்: கும்பம் .. பிறருக்கு ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: மீனம் .. சுய கவுரவத்திற்கு முதலிடம் கொடுக்கும் நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம் இது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: மீனம் .. சுய கவுரவத்திற்கு முதலிடம் கொடுக்கும் நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம் இது!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
04:10

மீனம் .. பூரட்டாதி 4 ம் பாதம்: சுய கவுரவத்திற்கு முதலிடம் கொடுக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குருபகவான் அக். 20 முதல் ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். வியாபாரம் தொழிலில் எதிர்ப்பு போட்டி என்ற நிலை உருவாகும். உடல் நிலையிலும் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டு மறையும் என்றாலும், நவ. 13 வரை ஆறாமிட கேது உங்களைப் பாதுகாப்பார். எந்த நிலை வந்தாலும் அதையெல்லாம் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். வரும் சங்கடமெல்லாம் வந்த வழி தெரியாமல் போகும். உங்கள் தன குடும்பாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சமடைந்திருப்பதால் பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். சகோதரர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். சிலர், புதிய நபர்களின் சொல்படி நடக்க வேண்டிய நிலைக்கு ஆளாவர். ஜென்ம ராசிக்குள் சனி  வக்கிரமாக சஞ்சரிப்பதா அனைத்திலும் நிதானம் தேவை. பெண்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.


சந்திராஷ்டமம்: நவ. 7.

அதிர்ஷ்ட நாள்: அக். 21, 30. நவ. 3, 12.


பரிகாரம்: ராமநாதசுவாமியை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி: திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதம் முழுவதும் ராசிக்குள் கர்மக்காரகன் சனி வக்கிரமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். உங்கள் சத்துரு ஜெய ஸ்தானாதிபதி சூரியன் மாதம் முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இடமாற்றம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்த நிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பிள்ளைகள்மீது அக்கறை கூடும். சுய தொழில் செய்து வருபவர்கள் முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். எந்த ஒன்றிலும் உங்களுடைய நேரடிப்பார்வை என்பது இந்த நேரத்தில் அவசியம். மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு ஆறாம் இடத்திற்கு அதிசாரமாக சென்றாலும் மாதத்தின் கடைசியில் விரய ஸ்தானத்தை விட்டு ராகு லாப ஸ்தானத்திற்கு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கும் உண்டாகும். பெரியோருடைய உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பெண்களுக்கேற்பட்ட பிரச்னைகள், குழப்பம் விலகும். ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு புதியவர்களின் நட்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றும் சரியாக நடக்கவில்லை என்ற வருத்தம் மேலிடும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.


சந்திராஷ்டமம்: நவ. 8.

அதிர்ஷ்ட நாள்: அக். 21, 26, 30. நவ. 3, 8, 12.


பரிகாரம்: மகாலிங்கசுவாமியை வழிபட தடைகள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.


ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். வித்யா காரகன் புதன் அஸ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்தாலும், அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம்வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். ராசிநாதன் குரு ஆறாம் இடத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு கிடைப்பதால், செய்து வரும் தொழில் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகவல் வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும் என்றாலும், ஜென்ம ராசிக்குள் சனி வக்கிரமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. கூட்டுத்தொழிலில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.


சந்திராஷ்டமம்: நவ. 9.

அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, 30. நவ. 3, 5, 12, 14.


பரிகாரம்: சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar