மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டில் மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம்,திருச்சி மற்றும் வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்ற நவம்பர் மாத முதல் வெள்ளி வழிபாட்டை முன்னிட்டு நடைபெற்ற முதல் திருப்பலியை சகாய நகர் போஸ்கோ மைய பாதிரியார் மரியதாஸ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் துவக்கி வைத்தனர். காலை 11:00 மணிக்கு மதுரை பாதிரியார் செங்கோல் தலைமையிலும், மாலை 6:00 மணிக்கு பாதிரியார்கள் பிரான்சிஸ் ஜெயபதி, தாமஸ்,ரமேஷ், பிரின்ஸ்,வின்சென்ட்,அருளானந்தம் அமல்ராஜ்,அந்தோணி நடத்தி வைத்தனர். வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் தலைமையில் மரியின் ஊழியர் சபை அருள் சகோதரிகள், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.