தென்காசி: ஆய்க்குடி காளகண்டேஸ்வரர் கோயிலில் நாளை (13ம் தேதி) விளக்கு பூஜை நடக்கிறது. ஆய்க்குடி காளகண்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மாத முதல் நாளன்று விளக்கு பூஜை நடந்து வருகிறது. நாளை (13ம் தேதி) மாசி மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. காலை சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, மாலை விளக்கு பூஜை வழிபாடு நடக்கிறது. வறட்சியை போக்கி மழை பெய்து நாடு செழிக்க பிரார்த்தனை செய்து நடத்தப்படும் இந்த விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும்படி விழா கமிட்டியார் கேட்டுக் கொண்டுள்ளனர்.