Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028 தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 )
விருச்சிகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

12 நவ
2026
11:11

விசாகம்: உழைப்பால் உயர்வு


நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ற பலன்களை வழங்கி மனித வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கி வருபவர்கள். ஒன்றரை ஆண்டு காலம் ஒரு ராசிக்குள் சஞ்சரிக்கும் இவர்களுக்கு அஸ்தமனமோ, வக்கிர நிலையோ இல்லை என்பதால் இவர்களுடைய சஞ்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது.


நவ. 13. 2026 முதல் விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உழைப்பை அதிகரிப்பார். வேலையில் அக்கறை இல்லாதவர்களையும் அக்கறையுடன் செயல்பட வைப்பார். வருமானம் வசதி வாய்ப்பு என்ற நோக்கத்தை மனதில் உண்டாக்குவார். செய்துவரும் தொழிலில் ஆர்வத்தை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். வேலைத்தேடி வந்தவர்களுக்கு வாய்ப்பினை வழங்குவார். மனதில் புத்துணர்ச்சியும், வாழ்க்கையில் முன்னேற்றம் காணக்கூடிய நிலையும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் இக்காலத்தில் அதிகரிக்கும்.

4 ம் பாதத்தினருக்கு எடுத்த காரியங்கள் யாவையும் வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.


இக்காலத்தில், விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு கேதுவின் 10 ம் இட சஞ்சாரம், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வரவிற்கு வழியமைக்கும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு இருந்து வந்த தடைகள் விலகும். பிற இனத்தினரால் மதத்தினரால் உதவிகள் கிடைக்கும். இருப்பிட வகையில் அனுகூலம் உண்டாகும். குறுக்கு வழியில் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். 4 ம் பாதத்தினருக்கு 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செய்துவரும் தொழிலில் நிம்மதி உண்டாகும். பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிர்பாராத வகையில் உறவினர்களிடமிருந்து சிலருக்கு சொத்து பணம் போன்றவை கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் எதிர்பார்த்த பலன்களை தரும். தந்தையின் உடலில் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மருத்துவச் செலவும் சிலருக்கு ஏற்படும்.


பொதுப்பலன்

மகரத்தில் ராகுவும், கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில், கர்மக்காரகன் சனி பகவான் மீனத்தில் சஞ்சரிக்கிறார். ஞானக்காரகன் குரு சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார் என்பதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு சங்கடங்கள் தோன்றும் நிலையிலும் அதில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். 4 ம் பாதத்தினருக்கு எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.


தொழில்

செய்துவரும் தொழிலில் அக்கறை கூடும். முதலீட்டிற்கேற்ப ஆதாயம் உண்டாகும். பணியாளர்களும் இக்காலத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஜுவல்லரி, கமிஷன் ஏஜென்சி, பில்டர்ஸ், ரியல் எஸ்டேட், விவசாயம், பிரிக்ஸ், குடிநீர், ஆயத்த ஆடை, ஒப்பந்தத்தொழில், பேன்சி, எக்ஸ்போர்ட், தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு வேலையில் அதிகபட்ச கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களையும் மேல் அதிகாரியையும் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். இக்காலத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுவது அவசியம். தங்கள் அதிகாரத்தை வைத்து தவறு செய்பவர்கள் சங்கடத்திற்கு ஆளவர். 4 ம் பாதத்தினருக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு விருப்பப்பட்ட இடத்திற்கு மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும். எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.


பெண்கள்

குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது இக்காலத்தில் நன்மையளிக்கும். சிலருக்கு உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாலினரிடம் கவனமாக இருப்பதால் உங்கள் பெயரும் கவுரவமும் நிலைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஓரடி விலகி இருப்பது அவசியம். கணவரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் மலைபோல் வரும் சங்கடமெல்லாம் பனிபோல் விலகும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும்.


கல்வி

படிப்பின்மீது ஆர்வம் கூடும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். எதிர்வரும் தேர்வுகளில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை

1,2,3 ம் பாதத்தினருக்கு 6 ம் இட சனியும், லாப குருவும், 4 ம் பாதத்தினருக்கு சகாய ராகுவும், குருப்பார்வைகளும் உடல் நிலையைப் பாதுகாக்கும். இதுவரையில் மருத்துவமனை மருத்துவமனையாக சென்று வந்தவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச்செலவுகள் குறையும்.


குடும்பம்

குடும்பத்தில் போராட்டம் பிரச்னைகள் என்றிருந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை ஏற்படும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கென்று செல்வாக்கும் மரியாதையும் உண்டாகும்.


பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட குடும்பத்தில் நன்மை உண்டாகும்.


அனுஷம்: வெற்றிமேல் வெற்றி


உங்கள் நட்சத்திராதிபதி சனி பகவானுக்கு ராகு கேது  நட்பானவர்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் ராகுவும், 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து போராட்டங்களையும் பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் உங்களுக்கு வழங்கி வந்தனர். எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலையும் உங்களுக்கு இருந்திருக்கும். வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களைக் கொண்டு சென்றிருக்கும். இந்த நிலையில் நவ. 13 முதல் முயற்சி மற்றும் சகாய ஸ்தானமான 3 ம் இடத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் இதுவரை உங்கள் வாழ்வில் ராகு கேது வழங்கி வந்த சங்கடமான பலன்களில் மாற்றம் ஏற்படும் வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.


முயற்சி ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். இதுவரை நீங்கள் இழந்த பொருட்கள் சொத்துகள் யாவும் இக்காலத்தில் மீண்டும் உங்களை வந்தடையும். உங்கள் சிறிய முயற்சிக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உறவினர்கள் உடன் பிறந்தவர்கள் நண்பர்கள் வழியாக உங்கள் தேவைக்கு அதிகமாகவே இக்காலத்தில் நன்மை உண்டாகும். நீங்கள் நினைத்திருந்த வேலைகளை இப்போது நடத்தி முடிக்க முடியும். உங்கள் புகழ் செல்வம் செல்வாக்கு எல்லாம் உயரும் என்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும்.


பாக்கிய ஸ்தனமான 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, பெரியோரின் ஆதரவை உண்டாக்குவார். குலதெய்வ வழிபாடு, கோயில் வழிபாடு என்று உங்களை நகர்த்துவார். வெளியூர் வெளிநாடு செல்லும் நிலையை உருவாக்குவார். 9 ம் இடம் என்பது உங்கள் தொழில் ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம் என்பதால் செய்துவரும் தொழிலில் நெருக்கடியையும் உண்டாக்கி உங்களை சோதிப்பார். வருமானத்தில் குறைவை ஏற்படுத்தி உலகையும் உறவினர்களையும் புரிந்து கொள்ள வைப்பார். செய்துவரும் வேலையில் சங்கடங்களை அதிகரித்து பொறுப்பினை உணர்த்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்ப்புகளை இழுபறியாக்கி நேர்மையாகவும் கவனமாகவும் செயல்பட வைப்பார் தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பையும் அதனால் செலவுகளையும் ஏற்படுத்தி தந்தையின் மீது அக்கறை கொள்ள வைப்பார். சிலருக்கு தங்கள் நிலையினாலும், வேலையின் காரணமாகவும் தந்தையை விட்டு விலகி தன் சொந்தக்காலில் நிற்கும் நிலையை  உண்டாக்குவார். இக்காலத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கும் சுய ஜாதகம் பலமாக இருப்பவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும். புகழ் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.


பொதுப்பலன் 

சகாய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சி யாவும் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்தாலும், அவருடைய சப்தம பார்வை உங்கள் லாப ஸ்தானத்துக்கு உண்டாவதால் வருமானம் உயரும். வரவேண்டிய பணம்வரும். வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் ஜீவனாதிபதியான சூரியன், மகரம், மேஷம், சிம்மம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களிலும், உங்கள் ராசியாதிபதி செவ்வாய், மகரம், மேஷம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களிலும் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.


தொழில்

செய்து வரும் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். இதுவரை நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம் தர ஆரம்பிக்கும். தங்கள் சூழ்நிலையின் காரணமாக மூடி வைத்திருந்த தொழில்களை சிலர் மீண்டும் தொடங்குவர். சிலர் புதிய தொழில் ஆரம்பிப்பர். பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம், பத்திரிகை, பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் வியாபாரம், நிதி நிறுவனம், தங்கம் வெள்ளி நகை வியாபாரம், உணவகம், மருந்தகம், ரசாயனம், இயந்திர தொழிற்சாலை, விவசாயப் பொருட்கள், சிறு தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் இருந்த நெருக்கடியும் பிரச்னைகளும் முடிவிற்குவரும். உங்கள் திறமையை நிர்வாகம் அறிந்து எதிர்பார்த்த சலுகைகளையும் பொறுப்பையும் வழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட போராட்டநிலை முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வும். விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும்.


பெண்கள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அந்நியரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் நிலை உயரும். கணவரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொன் பொருள் சேரும். இளம் வயதினருக்கு படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவு நனவாகும்.


கல்வி

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தவர்களும் இக்காலத்தில் அக்கறையுடன் படிக்கத் தொடங்குவீர்கள். ஆசிரியர்கள் ஆலோசனையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். பெற்றோரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.


உடல்நிலை

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரை நோய், விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் மருத்துவத்தால் ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.


குடும்பம்

குடும்பத்தில் நிம்மதி இல்லை, கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்றிருந்த நிலை மாறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். தன் குடும்பம் தன் மக்கள் என்ற எண்ணம் உண்டாகும். சொந்த வீடு வாகனம் என்ற லட்சியம் நிறைவேறும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.


பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


கேட்டை: நல்ல காலம் வந்தாச்சு


உங்கள் நட்சத்திராதிபதியான புதனுக்கு ராகுவும் கேதுவும் நண்பர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் போது அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்கக் கூடியவர்கள் ஆவர். புதனுக்கு நட்பான ராகு, சனி பகவானுக்கும் நட்பானவர் என்பதுடன் அவர் நவ. 13 முதல் சனி பகவானின் ஆட்சி வீடும் உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானமுமான மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ராகு கேதுவிற்கு பகை கிரகமும், உங்கள் ராசிக்கு 9 ம் இடமுமான சந்திரனுடைய கடக ராசிக்குள் கேது சஞ்சரிக்கப்போகிறார்.


மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உடல்நிலை சீராகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். செய்துவரும் தொழிலில் ஆர்வம் ஏற்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பிற இனத்தவர்கள் மதத்தவர்களால் ஆதாயம் கூடும். உடல் வலிமையும் மனவலிமையும் அதிகரித்து உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எதிர்பாலினர் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். உடன்பிறந்தவரின் உதவியும், நண்பர்களால் அனுகூலமும் ஏற்படும். கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்க வழி உண்டாகும். சொத்து சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான பலன் ஏற்படும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.


பாக்கிய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் ஆதரவும், அவர்களிடமிருந்து சொத்து பணம் போன்றவையும் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் யோகம் தரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப் பார்ப்பவர்களுக்கு முதலாளி அல்லது மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பதவி உயர்வு ஊதிய உயர்வு என்ற கனவு நனவாகும். செய்துவரும் தொழிலில் இக்காலத்தில் ஆதாயம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும். உறவினர் நண்பர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு செல்வாக்கும் செல்வமும் இருக்கும். தடைபட்ட கல்வி தொடரும். அல்லது கல்வியில் மேன்மை உண்டாகும்.


பொதுப்பலன்

சகாய ஸ்தான ராகுவும், குருவின் பார்வைகளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்தும். 3,6,11 ம் இடங்களில் தைரிய வீரிய காரகன் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும், 3,6,10,11 ம் இடங்களில் இராஜ கிரகமான சூரியன் சஞ்சரிக்கும் காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கிருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.


தொழில்

செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஷேர் மார்க்கெட், பைனான்ஸ், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர், ஹார்டுவேர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கெமிக்கல், மருந்தகம், கல்வி நிறுவனம், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, பப்ளிகேஷன், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலைப்நபார்க்கும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நிர்வாகத்திடம் நற்பெயர் உண்டாகும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவும், தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.


பெண்கள்

உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்க முடியும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்து வருவோருக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். இளம் பெண்களுக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


கல்வி

வித்யாகாரகன் புத பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, படிப்பின் மீது அக்கறை இருக்கும். சிலருக்கு தடைபட்ட கல்வி தொடரும். உயர் கல்வி கனவு நனவாகும். வெளி மாநிலம் வெளிநாடு என்று உயர் கல்விக்காக செல்லக்கூடிய நிலை சிலருக்கு உருவாகும்.


உடல்நிலை

நோய் நொடி என்று அவதிப்பட்டு வந்த நிலை மாறும். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நோய்கள் கட்டுப்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.


குடும்பம்

குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். பொன் பொருள், புதிய இடம் வீடு, வாகனம் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: பூவராக மூர்த்தியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (13.11.2026 - 1.6.2028 ) »
temple news
பராபவ ஆண்டு ஐப்பசி 27 (நவ.13) வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
கார்த்திகை: முயற்சி வெற்றிதரும்ஆத்ம காரகனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ராகுவும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: குறைகள் தீர்ப்பார் குருஉங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: எச்சரிக்கை அவசியம்உங்கள் நட்சத்திராதிபதியான குருவிற்கு ராகுவும் கேதுவும் பகையானவர்கள் ... மேலும்
 
temple news
மகம்: நல்லநேரம் வந்தாச்சுகடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar