பதிவு செய்த நாள்
12
நவ
2026
11:11
உத்திராடம்: திறமை வெளிப்படும்
உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும்போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கிறார். கேது, உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இந்த சஞ்சார நிலையின் காரணமாக, 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, குடும்பத்தில் சண்டை சச்சரவு என்று போராட்ட நிலை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பணவரவில் தடையுண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு எல்லாவற்றிலும் ஆசை அதிகரிக்கும். குறுக்கு வழியில் செல்ல மனம் தூண்டும். தவறான நபர்களின் சகவாசமும் அவர்களால் சங்கடங்களையும் சந்திக்க வேண்டிவரும். உடல் நிலையிலும் மனநிலையிலும் மாற்றம் ஏற்படும். எந்த இடத்திலும் தனித்து நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தகுதிக் குறைவானவர்களால் வீண்பழியும் சிலருக்கு ஏற்படும். உறவினருடன் கருத்து வேறுபாடும் பகையும் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் என்று ஏற்படும்.
கேது, உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சிலர் விபத்தையும சந்திக்க நேரும். வியாபாரம் தொழிலில் கடுமையான போராட்டம் இருக்கும். எதிர்பார்ப்பிலும் தடையுண்டாகும் வருமானம் குறையும் மனதில் சங்கடம் அதிகரிக்கும்.
2,3,4 ம் பாதத்தினருக்கு கேது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தவறான, தகுதிக்குறைவானவர் நட்பு ஏற்படும். சுய கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் பங்கம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டையும் பிரிவும் ஏற்படும். உறவினருடனும் பகை உண்டாகும். அதன் காரணமாக வசிக்கும் ஊரைவிட்டு வெளியூர் செல்லும் நிலையும் சிலருக்கு உண்டாகும்.
உத்திராடம் நான்கு பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ராகு கேது சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஆதரவு கரம் நீட்டுவார். சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். இக்காலத்தில் குருப் பார்வைகளும், 3,6,11 ம் ராசிகளில் சஞ்சரிக்கும் செவ்வாயும், 3,6,10,11 ம் ராசிகளில் சஞ்சரிக்கும் சூரியனும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பர். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். வருவாயை அதிகரிப்பர். நிம்மதியான நிலையை வழங்குவர்.
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிலர் ஈடுபடுவீர்கள். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். எலக்ட்ரானிக்ஸ். பாக்டரி. ஆட்டோமொபைல்ஸ். ஸ்டேஷனரி. பதிப்பகம். பத்திரிகை. சினிமா. டிவி. கம்ப்யூட்டர் தொழில்கள். வாகன உற்பத்தி, விற்பனை. பில்டர்ஸ். எக்ஸ்போர்ட். விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.
ராகு கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருந்தாலும், சனி, குரு, சூரியன், செவ்வாய் ஆதரவாக இருப்பர். வேலையில் அக்கறை கூடும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தங்கள் தகுதிக்கேற்ற வேலையில் அமர்வர். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
படிப்பு, திருமணம், மறுமணம் என்ற கனவு நனவாகும். வேலைத் தேடுபவர்களுக்கு கவுரவமான வேலைக் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். பொன் பொருள் சேரும். மனதில் இருந்த இறுக்கம் காணாமல் போகும் என்றாலும், குடும்பத்தினரையும் வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். புதியவர்களுடன் ஓரடி விலகி இருப்பதால் கௌரவம் பாதுகாக்கப்படும்.
படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும்.
உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. உஷ்ண நோய்கள், விஷ ஜந்துக்களால் பாதிப்பு, பரம்பரைநோய், தொற்றுநோய் என்று ஏதாகிலும் ஒன்று அவ்வப்போது சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும். சிலர் விபத்தையும் சந்திக்க நேரம் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம். உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.
திறமையாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டும், விட்டுக்கொடுத்தும் செயல்படுவது அவசியம். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
திருவோணம்: எச்சரிக்கை அவசியம்
விடா முயற்சிக்கு சொந்தக்காரரான உங்களுக்கு, இதுவரை உங்கள் ராசிக்கு 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து குடும்பத்தில் நெருக்கடி, பண விவகாரத்தில் சங்கடத்தை ஏற்படுத்தி வந்தார் ராகு. இனி நவ. 13 முதல் உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்க இருக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உடல்நிலையிலும் மனநிலையிலும் சங்கடங்களை உண்டாக்கி நெருக்கடிக்கு ஆளாக்கி வந்தார் கேது. இனி 7 ம் இடமான சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளார்.
கடந்த காலத்தில் சஞ்சரித்த இடங்கள் சங்கடத்தை வழங்கிவந்த நிலையில், தற்போது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் நன்மைகளை வழங்குவார்களா? என்ற கேள்வி உங்களுக்குள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் மனம் அலைபாய ஆரம்பிக்கும். சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் ஏற்படும். ஆசை அதிகரிக்கும். புதுமையை நோக்கி மனம் செல்லும். சமூக கட்டுப்பாடுகளைத் தாண்டி விருப்பப்பட்ட வழியில் செல்வீர்கள். பொன்னாசை,பொருளாசை, பண ஆசை, புகழ் ஆசை என்பதெல்லாம் இக்காலத்தில் ஏற்படும். அதன்காரணமாக கடன்படவும் நேரும். சிலர் வருமானம்தேடி வெளியூர், வெளிநாடு என்று சொந்த ஊரை விட்டு வெளியில் சென்று வசிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இந்த நேரத்தில் கருத்து வேறுபாடும் நண்பர்களுக்குள் இணக்கமற்ற நிலையும் உண்டாகும்.
சப்தம ஸ்தானமான ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் உண்டாகும். ஆனால் அதில் எந்தவிதமான நன்மையும் ஏற்படாமல் போகும். உங்கள் செயல்பாடுகளின் காரணமாக குடும்பத்தில் சங்கடமும் பிரச்னைகளும் உண்டாகும். உறவினருடன் முட்டல் மோதல் என்ற நிலையும் அவர்களால் வீண் செலவும் ஏற்படும். அரசு வழியிலும் செய்யாத காரியத்துக்காக அபராதம் செலுத்த நேரும். புதிய சிநேகிதம் ஏற்பட்டு இக்காலத்தில் உங்கள் பெயருக்கும் புகழுக்கும் பாதிப்பை உண்டாக்கும். கணவன் மனைவி உறவிலும் சங்கடங்கள் தோன்றும். இளம் வயதினருக்கு காதல் உண்டாகும் அதனால் பிரச்னையும் ஏற்பட்டு வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய நிலையும் உண்டாகும்.
ராகு கேது சஞ்சார நிலைகள் எதிர்மறையாக இருந்தாலும், சகாய சனியும், குரு பகவானின் பார்வைகளும், உங்கள் ராசிக்கு 3,6,11 ம் ராசிகளில் செவ்வாயும், 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களிலும் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானம் உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.
தொழில்காரகன் சனி பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். இயந்திரத் தொழில். வாகன உற்பத்தி. உதிரிபாகம் தயாரிப்பு. வாகன விற்பனை. ஆட்டோ மொபைல்ஸ். பேக்டரி. டிராவல்ஸ். எலக்ட்ரானிக்ஸ். கம்ப்யூட்டர். இன்ஜினியரிங். எக்ஸ்போர்ட். ஆன்லைன் வர்த்தகம். ஆடை ஆபரணம். அழகு சாதனம். பேன்சி ஸ்டோர். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர்ச்சி அடையும்.
ஜென்ம ராகு உங்களைக் குறுக்கு வழியில் கொண்டு செல்வதுடன் அதன் வழியாக அவமானத்தையும் நெருக்கடிகளையும் உண்டாக்க வாய்ப்பிருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். உடன் பணிபுரிபவர்களையும் மேல் அதிகாரியையும் அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் அவசியம். எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது உங்கள் கௌரவத்தைப் பாதுகாக்கும்.
ஜென்ம ராகு, ஆசையைத் தூண்டலாம். 7 ம் இடத்து கேது, உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். புதிய நட்புகளால் சிலர் அவமானத்திற்கும் ஆளாகலாம். காதல் நட்பு என மனம் மாறலாம் என்பதால் இக்காலத்தில் குடும்ப நலனையும் உங்கள் கௌரவத்தையும் மனதில் கொண்டு செயல்படுவது நன்மையளிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதுடன், வெளிவட்டார செயல்பாடுகளையும் அனுபவங்களையும் கூறி ஆலோசனைப்பெற்று செயல்படுவது நன்மையளிக்கும்.
மகரத்தில் ராகு, கடகத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலம் முழுவதும் படிப்பில் கூடுதல் அக்கறை வேண்டும். உங்கள் வாழ்க்கையும் எதிர்காலமும் படிப்பினால்தான் என்பதை உணர்ந்து செயல்படுவதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும்.
உடல் நிலையில் தொடர்ந்து ஏதாகிலும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். மருத்துவச்செலவுகளும் நீடிக்கும். வயிறு, மூட்டுவலி, இடுப்புவலி, சுவாச கோளாறு என உங்களை சங்கடப்படுத்தும். சிலர் ரகசிய வியாதிகளாலும் சங்கடத்திற்கு ஆளாக நேரும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் பாதிக்கப்படும் என்பதால் ஆரோக்கியத்திலும், ஒழுக்கத்திலும், உணவு முறையிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும்.
ஜென்ம ராகுவம் சப்தம கேதுவும் குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டாக்குவர் என்பதால் இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். எல்லா நேரத்திலும் துணை நிற்பவர்கள் குடும்பத்தினர்தான் என்பதை உணர்ந்து செயல்படுவதால் வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சிலர் புதிய வாகனம் இடம் வீடு என்று வாங்குவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: அகோர மூர்த்தியை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
அவிட்டம்: செயலில் கவனம் தேவை
உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் போது அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகின்றனர். அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 முதல், ராகு ஜென்ம ராசிக்குள்ளும், 3, 4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானமான 12 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, அவிட்டம் 1, 2 ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்திலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ருண, ரோக சத்துரு ஜெய ஸ்தானமான 6 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்.
நவ. 13 முதல் அவிட்டம் 1, 2 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு முன்னேற்றத்தில் தடைகளையும், தவறான நபர்களின் நட்பினையும், செய்துவரும் தொழிலில் நெருக்கடியையும், ஆரோக்கியத்தில் பாதிப்பையும், எதிர்பாராத இடமாற்றத்தையும், உறவுகளுடன் சங்கடத்தையும், ஆடம்பர ஆசைகளையும் ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு அதிகபட்சமான செலவினையும், அதற்காக கடன் வாங்கும் நிலையையும் உண்டாக்குவார். எந்த இடத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். சோதனையும் வேதனையும் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலை சரியாக செய்ய முடியாத அளவிற்கு சங்கடம் உண்டாகும். பணியாளர்களுக்கு மதிப்பும் ஊதியமும் குறைந்து போகும்.
இந்த நேரத்தில், 1, 2 ம் பாதத்தினருக்கு கேதுவின் 7 ம் இட சஞ்சாரத்தால் தவறான, தகுதி குறைவானவர்களின் நட்பு ஏற்படும். சுய கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் பங்கம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு பிரிவு ஏற்படும். உறவினருடன் பகை அதிகரிக்கும். வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் சென்று வாழவேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, இதுவரை இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடலில் ஏற்பட்ட பாதிப்பை விலக்குவார். ஆரோக்கியமாகவும் வேகமாகவும் செயல்பட வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்ப்பு, பகை, போட்டி, வம்பு, வழக்கு என்பதை எல்லாம் இல்லாமல் செய்வார். பார்த்துவரும் வேலையில் எதிர்பார்த்த உயர்வையும் மாற்றத்தையும் உண்டாக்குவார். வியாபாரத்தில் வருமானத்தை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். வெளிநாட்டு முயற்சிகளை லாபமாக்குவார்.
அவிட்டம் 1, 2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானும், 3, 4 ம் பாதத்தினருக்கு ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். இருவருக்கும், குருப் பார்வைகளும் 3,6,11 ம் இட செவ்வாயின் சஞ்சார காலங்களும், 3,6,10,11 ம் இட சூரியனின் சஞ்சார காலங்களும் முயற்சிகளை வெற்றியாக்கும். முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானத்தை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும்.
செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகளையும், மூடி வைக்கப்பட்ட தொழில்களையும் மீண்டும் தொடர முடியும். ரியல் எஸ்டேட். பில்டர்ஸ். மெடிக்கல். கெமிக்கல். உணவகம். இயந்திரத்தொழில். வாகன உற்பத்தி. ஆட்டோ மொபைல்ஸ். டிராவல்ஸ். எலக்ட்ரானிக்ஸ். விவசாயம். பங்கு வர்த்தகம். பேன்சி ஸ்டோர். மினரல் வாட்டர். கூல்டிரிங்ஸ். பெட்ரோலியம். அழகு சாதனங்கள். கற்பித்தல். போதித்தல். வாதாடுதல். பலன் உரைத்தல். சினிமா சார்ந்த தொழில்கள். தொலைக்காட்சி. வலைதளம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். நிறுவனத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும் என்றாலும், சுய ஒழுக்கத்திலும் எதிர்பாலினர் நட்பிலும் ஒரு எல்லைக்குள் இருப்பது அவசியம். இல்லையெனில் அதன் காரணமாக வேலையில் சங்கடங்களையும் இழப்பையும் சந்திக்க வேண்டிவரும்.
உடலிலும் மனதிலும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும் என்றாலும், குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்க வேண்டிய காலம் இது. உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். புதியவர்கள் கூறும் ஆலோசனைகளையும் ஏற்க வேண்டாம். எந்த ஒன்றாக இருந்தாலும் அதை உங்கள் கணவரிடம் சொல்லிவிட்டு அவருடைய உதவியுடன் செய்து கொள்வது வாழ்க்கைக்கு நன்மைதரும். குடும்பத்தில் நிம்மதியான நிலைக்கு வழிவகுக்கும்.
படிப்பின்மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள ஆலோசனைகளை ஏற்பீர்கள். வாழ்க்கையின் உயர்வுக்கு கல்விதான் அடிப்படை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.
ஆரோக்கியத்தில் பின்னடைவு, தொடர்ந்து மருத்துவச்செலவு என்றிருந்த நிலைமாறும். தொற்றுநோய், பரம்பரை நோய், விபத்து என உங்களுக்குண்டான சங்கடங்கள் விலகும். மருத்துவ சிகிச்சையின் காரணமாக ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.
குடும்ப நலனையும் கௌரவத்தையும் மனதில் கொண்டு தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். நம் குடும்பம், நம் துணை, நம் பிள்ளைகள் என்ற எண்ணத்தோடு செயல்படும்போது வாழ்க்கையில், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட்டுவர வாழ்வில் நன்மை உண்டாகும்.