Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீபத்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி: திரளாக பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

14 நவ
2026
10:11

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நேற்று மாலை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்


இக் கோயில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இங்கு ராகு, சிம்ஹிகை தேவியுடனும், கேது பகவான் சித்ரலேகாவுடனும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ஹோமங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்துறு மாலை 5:14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயர்ச்சியானார்கள். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ராகு பகவான் - சிம்ஹிகை தேவிக்கும், கேது பகவான் - சித்ரலேகா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ராகு பகவான் பச்சைப்பட்டிலும், கேது பகவான் மஞ்சள் பட்டிலும், மணக் கோலத்தில் தம்பதி சகிதமாக எழுந்தருளினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


இந்த பெயர்ச்சியினால் பரிகாரம் செய்ய வேண்டிய ரிசபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பூஜையில் பங்கேற்றனர். பயன் பெறும் மேஷம், சிம்மம், விருச்சிகம், மீன ராசிக்காரர்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந் நிகழ்ச்சியை கம்பம் ஜெயபாண்டியன், கலைவாணி குடும்பத்தினர் உபயதாரர்களாக இருந்து செய்தனர். சிவாச்சாரியார்கள் மணிவாசகம், அர்ச்சகர் முத்துப் பாண்டி, முத்து ஆகியோர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரலீலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: கந்தசஷ்டி விழா, 10-ம் தேதி முருகன் கோவில்களில் விமரிசையாக துவங்கியது.வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இக்கோவிலில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டுப்பாளையம் அருகே உள்ள, வெங்கடேசபுரம் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar