பசுமலை சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2026 03:11
செஞ்சி: செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் பசுமலையில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.
7 நாட்கள் நடந்த விழாவையொட்டி தினமும் மாலை வேத சமர்ப்பணம், விசேஷ திரவிய ஹோமம், மகா அர்ச்சனை, உற்சவர் ஆலய பிரதட்சணம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் மஞ்சள், சிவப்பு, பச்சை, உள்ளிட்ட அலங்காரங்கள் செய்தனர். நேற்று கந்தர் சஷ்டியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம், சந்தன அலங்காரம் சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய ருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்