Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தித்திக்கும் இன்பத் தீபாவளி
முதல் பக்கம் » துளிகள்
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா

பதிவு செய்த நாள்

15 நவ
2026
12:11

இன்று (நவ.15) கந்தசஷ்டி

வாழ்வு இனிக்க...

சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறியே முருகனின் பிறப்புக்கு கரு. இதனால் முருகனுக்கு அக்னி கர்ப்பன் எனப் பெயர்.
அப்பொறிகள் கங்கையில் விழுந்ததால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் வளர்ந்ததால் சரவண பவன் என்றும் அழைக்கப்பட்டார். இதை ஆறெழுத்து மந்திரமாக ஓம் சரவணபவ என்கிறோம். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அவர்களை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றார்.

குழந்தையைக் பார்க்க வந்த பார்வதி அன்போடு ஆறு குழந்தைகளை அணைத்தாள். இதனால் ஆறுமுகமும் ஒன்றாகி கந்தன் ஆனார். கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவர் எனப் பொருள். முருகப்பெருமானின் பெயரைச் சொன்னால் நம் வாழ்வு இனிக்கும்.

பாவம் தீரும்

சூரபத்மனை போரில் முருகன் வெற்றி பெற்றதை கந்த சஷ்டி விழாவாக கொண்டாடுகிறோம். இது முருகனின் இரண்டாவது படைவீடான திருச்செந்துாரில் நடக்கும்.
ஐப்பசி வளர்பிறை பிரதமை (நவ.10., 2026) முதல் சஷ்டி (நவ.15., 2026) வரையான ஆறு நாளும் இதற்கான விரத நாட்கள். ஆறாம் நாளான சஷ்டியான இன்று கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா பாடல்களை பாடுவது அவசியம். இதனால் முருகன் அருளால் பாவம் திரும். நினைத்தது நிறைவேறும்.

மாப்பிள்ளை சுவாமி


கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்ஸவர் சிலை மட்டும் இருக்கும். ஆனால் திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இவர்களில் களில் குமரவிடங்கரை ரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர்.


வெற்றிவேல்

கந்த புராணத்தை எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனை வணங்கும் போது, திருக்கைவேல் போற்றி போற்றி என இரண்டு முறை வேலை சிறப்பாக சொல்லுகிறார். தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு பெயராக வைப்பது வழக்கம் இல்லை. ஆனால் முருகனின் வேலுக்கு பாடும் மட்டும் இது பொருந்தாது. வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர்.

சந்தன மலை

ஆறுபடைவீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக்கோயிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்தூரும் மலைக்கோயிலே. கடற்கரையில் உள்ள சந்தன மலையில் தான் கோயில் இருந்தது. இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். இப்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம்.

ஆறு

எண் ஆறுக்கும், முருகப்பெருமானுக்கும் தொடர்பு அதிகம். இவருக்கு முகங்கள் ஆறு. இவரை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர். ஆறெழுத்து மந்திரத்திற்கு உரியவர். ஆறுபடை வீடுகளுக்கு சொந்தக்காரர். ஆறாம் திதியான சஷ்டியில், சூரசம்ஹாரம் செய்தவர். பாம்பன் சுவாமிகள் எழுதிய குமார ஸ்தவத்தில், ஓம் சஷ்டி பதயே நமோ நம: என உள்ளது. இதற்கு சஷ்டி தேவியின் தலைவனான சண்முகனுக்கு வணக்கம் எனப் பொருள்.

குழந்தை வேண்டுமா...

கந்தன் அருள் இருந்தால் தீய சக்தி ஓடும். அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி, இந்த விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு முருகனே குழந்தையாக பிறப்பார். இதை சட்டியில் (சஷ்டி) இருந்தால் அகப்பையில் (கருப்பை) வளரும் என்பர். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். வசிஷ்ட முனிவரிடம் இருந்து இந்த விரதத்தை பற்றி குழந்தை பேறு இல்லாத முசுகுந்தர், முனிவர்கள், தேவர்கள் தெரிந்து கொண்டனர்.


அருணகிரி நாதர் எழுதிய சுவாமி மலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என வேண்டுகிறார். இந்த பாடலை தினமும் பாடினால் குழந்தை வரம் கிடைக்கும்.

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலுலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ......பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்திலுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி.....தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த....குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே.

நைவேத்யம்


திருச்செந்துார் முருகனுக்கு தினமும் ஒன்பது கால பூஜை நடக்கும். அப்போது நைவேத்யம் செய்யப்படும் பிரசாதம்.

1. காய்ச்சிய பசும்பால், கற்கண்டு, பழங்கள்
2. வெண்பொங்கல், பாசிப்பருப்பு பொங்கல், நெய் சாதம்
3. தோசை, அப்பம், வடை, சுத்த அன்னம்(சாதம்)
4. கஞ்சி, பால், பழங்கள்
5. சர்க்கரைப் பொங்கல், நெய் சாதம், பருப்பு, கூட்டு, பாயாசம்
6. அப்பம், தேன்குழல், அதிரசம், சுண்டல், பொரி
7. மிளகுப் பொங்கல், வேக வைத்த பச்சைப் பயறு, சுத்த அன்னம் (சாதம்)
8. பால், பழம், வெற்றிலை, பாக்கு
9. காய்ச்சிய பால், வெல்ல உருண்டை, சர்க்கரை கலந்த பொரி

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
காட்டுக்குள்ளே திருவிழாதீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று.  காட்டில் மனைவி, ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar