கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாத முதல் திங்கள் கிழமையான இன்று கடலுார் பாடலீஸ்வரர் கோவில் சங்கு மண்டபத்தில் கலசங்கள், 108 சங்குகள் வைத்து மூல மந்திரம், வேத மந்திரம் முழங்க ேஹாமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களை கோவிலில் ஊர்வலமாக கொண்டு வந்து மூலவருக்கு அபிேஷகம் மற்றும் சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவரை அலங்கரித்து மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.