ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து பேசும் விருச்சிகராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் வழங்கும் கிரகங்களாக சுக்கிரன், புதன், குரு, கேது செயல் படுகின்றனர். வெகுநாள் திட்டமிட்ட எண்ணங்களை நிறைவேற்ற வாய்ப்பு உருவாகும். உறவினர், நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் கிடைக்கிற பயன்பாடு திருப்திகரமாக இருக்கும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். அவர்களிடம் பக்குவமாக பேசி நல்வழியில் நடத்த வேண்டும். உடல்நலத்தில் தொந்தரவு குறைந்து நல்லவிதமாக இருக்கும். எதிரிகளால் தொந்தரவு இருக்காது. கணவன், மனைவி அன்புடன் நடந்து உறவினர்களிடம் மதிப்பு, மரியாதை பெறுவர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். உற்பத்தி சிறந்து லாபம் அதிகமாகும். வியாபாரிகள் கூடுதல் ஆர்டர் கிடைத்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் மூலதன தேவைக்கு பயன்படும். புதிய கிளைகளை துவங்கும் வா#ப்பு உள்ளது. பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி பணிகளை வேகமாக முடிப்பர். காலதாமதமான சலுகைகள் முயற்சியின் பேரில் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவருக்கு நல்ல ஆலோசனை சொல்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு தேவையான பணம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் பெற்று வேலைகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். சலுகைகள் ஓரளவுக்கு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவர். உற்பத்தி அளவும் பொருளின் தரமும் அதிகரிக்கும். லாபம் ஓரளவுக்கு இருக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணி செய்து நற்பெயரும் புகழும் பெறுவர். எதிர்ப்பாளர்களால் இருந்த தொல்லை குறையும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் கூடுதல் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சிவிகிதம் பெறுவர். பெருமாளை வழிபடுவதால் புகழும், பொருள் சேர்க்கையும் கிடைக்கும்.
உஷார் நாள்: 20.2.13 அதிகாலை 4.36 முதல் 22.2.13 மதியம் 3.56 வரை வெற்றி நாள்: மார்ச் 8, 9 நிறம்: ஊதா, ரோஸ் எண்: 1, 4
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »