நடை, உடை, பாவனையில் தனித்துவம் பெற்ற துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய் நற்பலன் வழங்குகிற இடங்களில் அமர்வு பெற்றுள்ளனர். ஏழரைச்சனியின் தாக்கம் இருந்தாலும் அளவான பணவரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது நல்லது. தாயின் தேவை அறிந்து நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களைக் கண்டிப்பதிலும், சரிசெய்வதிலும் நிதான அணுகுமுறை பின் பற்றுவது அவசியம். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். வாழ்வியல் நடைமுறையின் முன்னேற்றம் கண்டு எதிரிகள் வியப்புடன் விலகுவர். நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி உடல்நலத்தைப் பாதுகாத்திடுவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடி குறையும். தம்பதியர் குடும்ப பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வர். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் சிறு அளவில் சீர்திருத்த நடைமுறை மேற்கொள்வர். உற்பத்தி அளவு அதிகரிக்கும். வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிட சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, வேலைகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி இருக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் வேலைகளைக் குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, வெகுமதி உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் புதிய ஆர்டர் பெறுவர். உபரி பணவரவு சேமிப்பாக மாறும். அரசியல்வாதிகள் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் அதிக பணவரவு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தரத்தேர்ச்சி கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் சகல வளமும் பெறலாம்.
உஷார் நாள்: 17.2.13 மாலை 5 முதல் 20.2.13 அதிகாலை 4.35 வரை வெற்றி நாள்: மார்ச் 6, 7 நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 2, 7
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »