சமயோசித செயலால் பிறரைக் கவரும் தனுசுராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன், சனி, ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குகின்றனர். தகுதி, திறமை வளரும். பணிகளில் முன்னேற்றம் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த கருத்துவேறுபாடு விலகும். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பும், வாகனம் ஓட்டுவதில் மிதவேகமும் நன்மைபெற உதவும். புத்திரர்களின் சேர்க்கை சகவாசம் அறிந்து அவர்களை நல்வழியில் செயல்பட வைப்பது அவசியம். பூர்வ சொத்தில் கிடைக்கிற பண வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். சிறு தொந்தரவு என்றாலும் உடன் சிகிச்சை எடுத்து விடவும். விஷப்பிராணிகளிடம் விலகிச் செயல்படுவதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். தம்பதியர் ஒளிவுமறைவின்றி பேசி சந்தோஷ வாழ்வு நடத்துவர். நண்பர்களின் உதவியால் நன்மை பெறுவீர்கள். வெளியூர் பயணம் இனிதாக அமைந்து நல்ல அனுபவங்களை பெற்றுத்தரும். தொழிலதிபர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி, தரத்தில் முன்னேற்றம் காண்பர். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கி விற்பனையின் அளவை அதிகரிப்பர். சுமாரான லாபம் உண்டு. பழைய பாக்கி வசூலாகும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். ஓவர்டைம் போன்றவற்றால் பணவரவு அதிகரித்து குடும்பத் தேவைக்கு போதுமானதாக இருக்கும். குடும்பப் பெண்கள் புத்திரர்களின் படிப்பு வளர்ச் சிக்கு தேவையான முயற்சியை மேற்கொள்வர். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிட சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். சலுகை பெறுவதில் இருந்த தாமதம் விலகும். சுயதொழில் புரியும் பெண்கள் தேவையான மூலதனத்துடன் அபிவிருத்தி பணி செய்வர். அதிக ஆர்டர் கிடைத்து உற்பத்தி, பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தம்பட்டம் அடிப்பதைக் குறைத்து கூடுதல் சேவை மனப்பாங்குடன் செயல்படுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் உபரி பணவரவு கிடைக்கும். மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து ஆசிரியர், பெற்றோரின் பாராட்டு பெறுவர். பைரவரை வழிபடுவதால் கஷ்டம் நீங்கி நன்மை உண்டாகும்.
உஷார் நாள்: 22.2.13 மதியம் 3.57 முதல் 24.2.13 இரவு 1.33 வரை வெற்றி நாள்: மார்ச் 10, 11, 12 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »