கருணை மனதுடன் பிறருக்கு உதவும் மகரராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், செவ்வாய், குருபகவான் செயல்படுகின்றனர். பேச்சில் வசீகரமும் செயல் களில் முன்யோசனையும் நிறைந்திருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு சிறந்த மாதமாக அமைந்துள்ளது. வீடு, வாகன வகையில் நம்பகத்தன்மை குறைவான எவருக்கும் இடம் தரவேண்டாம். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை நன்றாக புரிந்துகொண்டு நல்வழி நடந்து பெருமை தேடித்தருவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கலாம் என்பதால், ஒவ்வாத உணவு வகைகளை தவிர்க்கவும். கடன்களை அடைக்க கடும் முயற்சி எடுத்து பலனடைவீர்கள். உங்களை அவமானப்படுத்த சிலர் எண்ணுவர். அவர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுபவது நல்லது. தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சந்தோஷமாக இருப்பார்கள். நண்பர்களின் ஆலோசனையும், உதவியும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கும். வெளியூர் பயணம் எதிர்பார்த்த நன்மைகளை எளிதாக பெற்றுத்தரும். தொழிலதிபர்கள் சிறு அளவில் நடைமுறை மாற்றங்களை உருவாக்கி உற்பத்தி, பணவரவில் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி தாராள பணவரவு பெறுவர். பணியாளர்கள் சக பணியாளர்களுடன் நட்பு கொள்வர். அவர்களிடமிருந்து தொழில்நுட்ப அறிவை கற்றுக் கொள்வீர்கள். ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் சிக்கனமாக செலவு செய்து பணத்தை மிச்சப்படுத்துவர். கணவருடன் ஒற்றுமை சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி அதிகமாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் திறமை, செல்வாக்கைப் பயன்படுத்தி எதிரிகளால் வருகிற சிரமங்களைச் சமாளிப்பர். விவசாயிகள் கடும் உழைப்பின் பேரில் நல்ல மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பில் திருப்திகர லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர். விநாயகரை வழிபடுவதால் துவங்கும் செயல்கள் வெற்றி தரும்.
உஷார் நாள்: 24.2.13 இரவு 1.34 முதல் 27.2.13 காலை 8.38 வரை வெற்றி நாள்: பிப்ரவரி 13, 14, மார்ச் 12, 13 நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 5
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »