கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் கும்பராசி அன்பர்களே! நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், கேது இருவரும் இருக்கின்றனர். ராசியில் முக்கூட்டு கிரகச்சேர்க்கை உள்ளது. இதனால் செயல் தடையின்றி நிறைவேற பிறரது உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேச்சில் கடுமை தோன்றும். நிதானித்து இருந்தால் மட்டுமே தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை முறையாக பயன்படுத்துவது போதுமானது. தாய்வழி உறவினர் அன்பு பாராட்டி மகிழ்வர். உறவினர் வீட்டு விசேஷங்களில் அடிக்கடி கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புத்திரர் பிடிவாதத்துடன் நடந்து படிப்பில் பின்தங்க வாய்ப்புண்டு. தக்க அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்துவீர்கள். எதிரியால் வரும் பிரச்னைகளை தக்க உபாயத்தி னால் சரிசெய்வீர்கள். உடல்நிலை அதிருப்தி அளிக்கும். சிலருக்கு மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் நிர்வாகச் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவர். உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவர். வியாபாரிகள் மிதமான விற்பனையும் அதற்கேற்ற வருமானமும் காண்பர். பணவிஷயத்தில் எச்சரிக்கை அவசியம். பணியாளர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தடுமாறுவர். சலுகைப்பயன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்ப பெண்கள் குடும்பச்செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பர். குடும்ப அமைதிக்குப் பாடுபடுவர். பணிபுரியும் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவதால் மட்டுமே பணிகளைக் குறித்த காலத்தில் நிறைவேற்ற முடியும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பினால் உற்பத்தி, விற்பனை அளவை சீராக்குவர். யாருக்காகவும் பணப்பொறுப்பு ஏற்பது கூடாது. அரசியல்வாதிகள் பொது விஷயங்களில் நியாய தர்மத்தை பின்பற்றினால் மட்டுமே நற்பெயரை தக்க வைக்க முடியும். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பால் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் படிப்போடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொள்வர். சாஸ்தாவை வழிபடுவதால் தொழில் சிறந்து வருமானம் கூடும்.
உஷார் நாள்: 27.2.13 காலை 8.39 - 1.3.13 மதியம் 12.32 வெற்றி நாள்: பிப்ரவரி 15, 16, 17 நிறம்: காவி, நீலம் எண்: 7, 8
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »