Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் மலைப்பாதை வழியாக ... சபரிமலை ஆன்லைன் முன்பதிவு: ரத்தாகும் சிலாட்டு களை மீண்டும் முன் பதிவு செய்ய வசதி தேவசம்போர்டு தலைவர் தகவல் சபரிமலை ஆன்லைன் முன்பதிவு: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பையில் பஸ் ஏற திண்டாடும் பக்தர்கள்: போலீஸ் பாதுகாப்புடன் வரிசை முறை தேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பம்பையில் பஸ் ஏற திண்டாடும் பக்தர்கள்: போலீஸ் பாதுகாப்புடன் வரிசை முறை தேவை

பதிவு செய்த நாள்

25 நவ
2026
11:11

பாலக்காடு: கேரள மாநிலத்தில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல, மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மலையிறங்கி ஊர் திரும்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கேரள அரசின் தொடர் பஸ்சில் ஏறுவதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.


முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை வசதி இல்லாததால், பஸ்கள் வந்தவுடன் பக்தர்கள் முண்டியடித்து ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உடல் வலிமை கொண்டவர்கள் முதலில் ஏறி இடம்பிடிப்பதும், சிலர் ஜன்னல்கள் வழியாக பஸ்சிற்குள் நுழைவதும் வாடிக்கையாகிவிட்டது.


இதனால், பம்பை பஸ் நிலைய பகுதிகளில் கடுமையான கூட்ட நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு விபத்து அபாயம் உருவாகியுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.


நிரந்தர தீர்வு தேவை: சபரிமலையில் தரிசனம், அன்னதானம், பிரசாதம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு, அரசு துறைகள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால், பம்பையில் இருந்து திரும்பும் போது, நிலவும் இந்த பிரச்னைக்கு பல ஆண்டுகளாகியும், நிரந்தர தீர்வு காணப்படவில்லை என, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


சபரிமலை சென்று வந்த பக்தர்கள் கூறியதாவது: பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு பஸ் ஏறும் இடங்களில் போலீஸ் நேரடி கட்டுப்பாட்டில் வரிசை முறையை அமல்படுத்த வேண்டும். பஸ் வருகைக்கு ஏற்ப பயணியரை ஒழுங்குபடுத்தி ஏற்றி விட வேண்டும். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பஸ்சில் ஏறுவதற்கு தனி முன்னுரிமை அளிக்க வேண்டும். இம்முறை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மண்டல கால முன்னேற்பாடுகள் குறித்த அரசு உயர்மட்ட ஆய்வு கூட்டங்களில், பம்பையின் போக்குவரத்து நெரிசலுக்குச் சிறப்பு கவனம் செலுத்தி, பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் ரத்தாகும் சிலாட்டுகளை மீண்டும் முன் பதிவு செய்ய வசதி ... மேலும்
 
temple news
சபரிமலை: கடந்த 27 ஆண்டுகளாக தினமும் பம்பையில் இருந்து மலைப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்தே சென்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சாதிக்கும் மன உறுதியும், அசைக்க முடியாத கடவுள் பக்தியும் இருந்தால் வயது ஒரு தடையாக இருக்காது ... மேலும்
 
temple news
பாலக்காடு: சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இரவு நேரங்களில் வாகன ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar