Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு 1,126 கி.மீ., நடந்தே சென்ற ... சபரிமலையில் 5 நாட்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை! சபரிமலையில் 5 நாட்களில் 13 ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பக்தர்களின் வாகன ஓட்டுனர்களுக்கு ‘சுக்கு காபி’ கேரள போலீசார் துவக்கி வைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களின் வாகன ஓட்டுனர்களுக்கு ‘சுக்கு காபி’ கேரள போலீசார் துவக்கி வைப்பு

பதிவு செய்த நாள்

23 நவ
2026
02:11

பாலக்காடு: சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களுக்குச் சூடான சுக்கு காபி வழங்கும் சிறப்புத் திட்டத்தைக் கேரள காவல்துறை தொடங்கியுள்ளது.


கேரள –- தமிழக மாநில எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இந்த இலவச சுக்கு காபி விநியோக மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இரவு நேரங்களில் நீண்ட தூரம் வாகனம் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் தூக்கத்தால் விபத்துகள் நிகழ்கின்றன. இதனைத் தடுக்கும் விதமாக, ஓட்டுநர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்து விபத்துகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தட்சிண பாரத் ஆர்ட்ஸ் -ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல் அண்ட் எஜுகேஷன் புரொமோஷன் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்புடன் இணைந்து காவல்துறை இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாகச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் காவல்துறையினர், ஓட்டுநர்களுக்குச் சுக்கு காபி வழங்குவதோடு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மண்டல - மகரவிளக்கு சீசன் முடியும் வரை இச்சேவை தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதோடு, மக்களின் உயிர்காக்கும் இத்தகைய அக்கறையான முயற்சிக்குப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க விழாவில், பாலக்காடு மாவட்ட எஸ்.பி. அப்துல் ரஷீத், ஏ.எஸ்.பி. சந்தோஷ், டி.எஸ்.பி-க்கள் சந்தோஷ்குமார், சசிதரன், (புதுச்சேரி) கசபா இன்ஸ்பெக்டர் ராஜீவ், வாளையார் எஸ்.ஐ. ஹேமலதா, அமைப்பின் புரவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் சுனிதா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சாதிக்கும் மன உறுதியும், அசைக்க முடியாத கடவுள் பக்தியும் இருந்தால் வயது ஒரு தடையாக இருக்காது ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 ... மேலும்
 
temple news
கூடலுார்: சபரிமலைக்கு சத்திரம், புல்மேடு வனப்பாதை வழியாக செல்வதில் ஐயப்ப பக்தர்கள் ஆர்வம் ... மேலும்
 
temple news
மூணாறு: நிலக்கல்லில் ‘மல்டி லெவல்’ கார் பார்க்கிங் அமைக்கப்படும் என கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்தது. எனினும் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar