Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீராடினால் என்னென்ன பாவம் நீங்கும்? நீராடினால் என்னென்ன பாவம் நீங்கும்?
முதல் பக்கம் » மகிமைமிக்க மாசி மகம்!
மாசி மகம் கொண்டாடப்படுவது எப்போது?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
01:02

குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும் போது வரும் மாசி மாதத்து நட்சத்திரமே. மகாமக தினமாகக் கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குரு பிரவேசம் நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால், அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும்.

சுற்றி வந்தாலே போதும்: மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதை ஒரு முறை சுற்றி வந்தாலே, பாற்கடலைக் கடையும்போது மத்தாக இருந்த மேருமலையை நூறு தடவை சுற்றிய பலன் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும். மூன்று தடவை சுற்றி வந்தால், பிறப்பு என்பதே இல்லாத நிலையும் ஏற்படும்.

ஏழு வகை குடும்பத்திற்கும் விமோசனம்: மகாமக குளத்தில் குடும்பத்திலுள்ள எல்லாரும் போய் நீராட வேண்டிய அவசியமில்லை. குடும்பத்தில் பயபக்தியுள்ள ஒருவர் மட்டும் நீராடினால், முந்தைய தலைமுறையினர் செய்த பாவம்,. இனி வரப்போகும் தலைமுறையினர் பாவம் செய்யாமல் புண்ணியங்களை சேகரித்துக் கொள்ளுதல் ஆகிய நற்பலன்கள் கிட்டும். தம்குடும்பம், தாய்வழி குடும்பம், தந்தை வழி குடும்பம், சம்பந்தி (பெண்ணை எடுத்தவர்) வழி குடும்பம், சிற்றன்னை குடும்பம், உடன் பிறந்தார் குடும்பம், தந்தையுடன் பிறந்த சகோதரிகள் குடும்பம், தாய்மாமன் மற்றும் பெண் கொடுத்த மாமனார் குடும்பம் ஆகிய ஏழு வகை குடும்பங்களும் பாவம் நீங்கி பரிசுத்தமாகும்.

மகாமக தீர்த்த மகிமை: சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை, இன்னும் புண்ணிய ÷க்ஷத்திரங்களிலுள்ள பல வகை தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால் மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும் மகாமக குளத்தில் நீராவ வருவதாக ஐதீகம். எனவே கும்பமேளா நீராட்டத்தை விட இது உயர்ந்ததாக கருதப்படுகிறது.

என்றென்று குளிக்கலாம்?

மாசிமக நட்சத்திரம் சித்திரை மாதப்பிறப்பு, கார்த்திகை சோமவாரம்(திங்கள்கிழமைகள்) அமாவாசை, பவுர்ணமி, சூரிய சந்திர கிரகண நாட்கள், தட்சிணாயண காலம்(ஆடிமாதப்பிறப்பு) ஐப்பசி விசு, தேய்பிறை அஷ்டமி திதி, சிவராத்திரி. வெள்ளிக்கிழமைகள் மகாமக குளத்தில் குளிக்க ஏற்ற காலம்.

இதுவரை மகாமகம் நடந்த ஆண்டுகள்
1518, 1529, 1541, 1553, 1565, 1577, 1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743,  1755,1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004

மாசி மகத்தன்று செல்ல வேண்டிய கோயில்கள்:

மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்

கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்

 
மேலும் மகிமைமிக்க மாசி மகம்! »
temple news
மகாமகத்தன்று முறைப்படி தீர்த்தமாடினால், பிரம்மஹத்தி (கொலை) தோஷம், கோயில் சொத்தை கொள்ளையடித்த பாவம், ... மேலும்
 
temple news
மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது ... மேலும்
 
temple news
மகாமகத்தன்று மகாமக குளத்தில் குளித்தால் மட்டும் போதாது. கும்பகோணம் நகரை ஒட்டி ஓடும் காவிரியிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar