விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் கோயிலில் திருவள்ளுவர் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் உண்டியல் வசூல் பணம் எண்ணினர்.பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் உண்டியல் வசூல் பணம் எண்ணும் பணி நெல்லை இந்து அறநிலையத்துதுறை துணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலையில் நடந்தது. பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி அலுவலர் சேகர் பேராசிரியர் கார்த்திகேயன் தலைமையில் உண்டியல் வசூல் பணம் எண்ணினர். கோயில் ஆய்வாளர் வள்ளியம்மாள், நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன், கணக்கர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர். காலை சுமார் 10 மணிக்கு துவங்கிய உண்டியல் எண்ணும் பணி மாலை 4 மணி வரை நடந்தது.இதில் பணமாக 6லட்சத்து 922 ரூபாயும், 27 கிராம் தங்கமும், 80 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தது.