பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரி விழாவையொட்டி, ராமேஸ்வரம் கோவிலில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மண்டகப்படிக்கு புறப்பாடால், இன்று கோவில் நடை சாத்தப்படும் என, கோவில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாசி திருவிழா 3ம் நாளான இன்று, கோவில் நடை, அதிகாலை 3:00 மணிக்கு திறக்கப்பட்டு, 4:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து, வழக்கமான கால பூஜையும் நடைபெறும். பின், 5:00 மணிக்கு, கோவிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில், எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். மீண்டும் சுவாமி, அம்மன் கோவிலுக்கு வந்தவுடன், காலை 6:30 மணிக்கு, சுவாமி வெள்ளி பூதம், அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகியவுடன், கோவில் நடை சாத்தப்படும், பின், மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மஹா தீபாரதனை முடிந்தவுடன், அங்கிருந்து புறப்பாடாகி, இரவு 9:00 மணிக்கு மேல் கோவிலுக்கு வந்தவுடன், நடை திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜை நடந்தவுடன், மீண்டும் நடை சாத்தப்படும், என்றார்.