ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சோமனூரை அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு பொங்கல் திருவிழா கடந்த 19ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தினமும் கம்பம் சுற்றி ஆடுதல், அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.