பதிவு செய்த நாள்
07
மார்
2013
11:03
பவானி: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. காசிக்கு அடுத்தபடியாக, முக்கூடல் சங்கமிக்கும் இடமாக கூடுதுறை விளங்குகிறது. இங்கு ராஜகோபுரம், பெருமாள் கோவில், வேதநாயகி அம்மன் கோவில், சங்கமேஸ்வரர் ஆலயம் உட்பட, 17 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று, உதவி ஆணையர்கள் நடராஜன், வில்வமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், பெருமாள் கோவில் மண்டபத்தில், உண்டியல்களும் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் சங்கமேஸ்வரர் கோவில், 17 உண்டியலிலும், ஆறு லட்சத்து, 75,617 ரொக்கம் இருந்தது. பக்ரைன் நாட்டு பணமான, ஒரு தினார் நோட்டு, மலேசியா, 50 ஆர்.எம்., ஒரு நோட்டும் இருந்தது. சங்கமேஸ்வரர் கோவிலின் துணை கோவிலான பழனியாண்டவர் கோவிலில், 35,795 ரூபாயும், காசி விஸ்வநாதர் கோவில் உண்டியலில், 4,986 ரூபாயும் இருந்தது. பவானி கோவில் ஆய்வாளர் பாலசுந்தரி, பவானி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி மாணவர்கள், கோவில் ஊழியர்கள், கனரா வங்கி ஊழியர்கள் என பலரும் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றனர்.