கடகம்: பரந்த மனப்பான்மையுடன் செயல்படும் கடகராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 01:03
கடன் வாங்கும் சூழல்: உங்கள் ராசிக்கு இந்த மாதம் நற்பலன் வழங்குகிற கிரகங்களாக அஷ்டம ஸ்தான புதன், பாக்ய ஸ்தான சுக்கிரன், ஆதாய ஸ்தான அமர்வு பெற்றுள்ள குரு செயல்படுகின்றனர். அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் இருந்தாலும் வாழ்வு வளம்பெற தேவையான நல்ல சூழ்நிலை உருவாகும்.ஆர்வம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு முன்னேற்றம் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். புத்திரர்கள் கவனக்குறைவான செயலால் தேவையற்ற குழப்பமும் வருத்தமும் அடைவர். உங்களின் கனிவான வழிகாட்டுதல் அவர்களை நல்லவிதமாக செயல்பட வைக்கும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு அளவான பணவரவு உண்டு. உடல்நலம் சுமாராக இருக்கும்.உங்களால் பெற்றோருக்கோ, வாழ்க்கைத் துணைக்கோ கடனாகும் சூழல் உள்ளது. தம்பதியர் குடும்பநலன் பாதுகாக்க அதிக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வர். நண்பர்கள் உங்கள் மீதான நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்கிற வகையில் இனிய சூழ்நிலை உருவாகி உதவும்.தொழிலதிபர்கள் சிறந்த முயற்சியினால் உற்பத்தியின் தரம், அளவை அதிகரிப்பர். எதிர்பார்த்த பணவரவு சீராக கிடைக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளிக்க லாபத்தைக் குறைக்க வேண்டி வரும். இருப்பினும், விற்பனையில் பாதிப்பு இராது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பர். ஓரளவு சலுகை கிடைக்கும்.குடும்பப் பெண்கள் கணவருக்கு நல்ல ஆலோசனை வழங்கி குடும்ப நன்மைகளுக்கு உறுதுணையாக செயல்படுவர். பணிபுரியும் பெண்கள் வேலைப்பளு காரணமாக பணிகளை தாமதமாகச் செய்வர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க ஆர்வமுடன் செயல்படுவர். பாக்கிப்பணம் வசூலாகி தொழில் உபகரணங்கள் வாங்க பயன்படும்.அரசியல்வாதிகள் எதிர்ப்பாளரால் இருந்த சிரமங்களைச் சரிசெய்து தனது குறிக்கோளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு ஓரளவு மகசூல், பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் திருப்திகர லாபம் உண்டு. மாணவர்கள் சக மாணவர்களின் உதவியினால் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் சகல வளமும் கிடைக்கும். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றவும்.
உஷார் நாள்: 6.4.13 காலை 9.19 முதல் 8.4.13 மதியம் 2.26 வரை வெற்றி நாள்: மார்ச் 26, 27, 28 நிறம்: நீலம், ஆரஞ்ச் எண்: 8, 9
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »