சிம்மம்: எளிதில் வெற்றி பெற திட்டமிட்டு செயல்படும் சிம்மராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 02:03
எதிரிகள் ஓட்டம்: உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான புகழ் ஸ்தானத்தில் ராகு, சனிபகவான் அனுகூல அமர்வு பெற்று செயல்படுகின்றனர். சுக்கிரனும் உச்ச பலத்துடன் தன் பங்கிற்கு தாராள நற்பலன்களை வழங்குகிறார். உங்கள் எண்ணத்திலும் செயலிலும் நேர்மை மிகுந்திருக்கும். பயன் அறிந்து பேசுவது நல்லது. கடந்த காலத்தில் நிறைவேற்ற இயலாத செயல்ஒன்றை உற்சாகமாக செய்து நன்மையும் புகழும் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவினர் தேவைகளுக்கு ஓரளவு உதவுவீர்கள்.பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். புத்திரர் பிடிவாத குணத்துடன் நடந்துகொள்கிற கிரகநிலை உள்ளது. உங்களின் அன்பும் பாசமும் புத்திரர் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். எதிரிகள் விலகுவர்.தம்பதியர் அதிருப்தி எண்ணங்களை மறந்து குடும்ப பெருமை காத்திட பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்கள் சொல்கிற நியாயங்களை ஏற்றுக் கொள்வது நட்புக்கு பெருமை சேர்க்கும்.தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற வெளியூர் பயணம் மேற்கொள்வர். கூடுதல் முயற்சியால் உற்பத்தி சீராகும். வியாபாரிகள் கூடுதல் தரம் உள்ள பொருட்களை வாங்கி விற்பதில் ஆர்வம் கொள்வர். விற்பனை அதிகரித்து பணவரவும் லாபமும் கூடும். பணியாளர்கள் வேலைப்பளுவை சமாளித்து பணி இலக்கை நிறைவேற்றுவர். ஓரளவு சலுகை கிடைக்கும்.குடும்பப் பெண்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முன்னுரிமை தருவர். குழந்தைகளை கண்டிப்பதில் நிதான அணுகுமுறை நல்லது. பணிபுரியும் பெண்கள் வேலைப்பளு காரணமாக பணி இலக்கை நிறைவேற்ற தாமதம் ஏற்படும். சலுகைகள் ஓரளவு உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் கூடுதல் ஆர்டர் பெறுவர். உபரி வருமானம் கிடைக்கும்.அரசியல்வாதிகள் சிறு செயலிலும் அதிக நன்மை கிடைக்கப்பெறுவர். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் திருப்திகரமாக கிடைத்து மகசூல் பெருகும். கால்நடை வளர்ப்பு உபரிபணவரவைத் தரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் தரதேர்ச்சி சீராகும்.
உஷார் நாள்: 14.3.13 காலை 6.01-மதியம் 2.14 வரை மற்றும் 8.4.13 மதியம் 2.27 முதல் 10.4.13 இரவு 9.52 வரை வெற்றி நாள்: மார்ச் 29, 30 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 2, 3
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »