கன்னி: நிதானமே பிரதானம் என நினைக்கும் கன்னிராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 02:03
பணத்தட்டுப்பாடு: உங்கள் ராசிநாதன் புதன், ஆறாம் இடத்தில் அமர்வு பெற்று அனுகூல பலன்களை தருகிறார். பாக்ய ஸ்தானத்தில் உள்ள குரு, தன் பங்கிற்கு நல்ல பலன்களை வழங்குகிறார். இருப்பினும், வெளி விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் குறித்து பேச வேண்டாம். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி சுமாராக இருக்கும். பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை உங்களிடம் சொல்வர். அவற்றைத் திறந்த மனதுடன் ஏற்று பேசுவதால் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கலாம். சொத்துகளின் பேரில் கடன் பெறுபவர்கள், நம்பகமானவரிடம் வாங்குவது நல்லது. பணத்தட்டுப்பாடு இருக்கும். உடல்நலம் சீராகும். பழைய விவகாரம் ஒன்றில் சாதகமான தீர்வு கிடைக்கும்.தம்பதியர் வீண் விவாதங்களை தவிர்ப்பதால், தேவையற்ற குழப்பம் வராமல் விலகும். நண்பர்களிடம் உதவி கேட்பதைத் தவிர்ப்பது நல்லது.தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து உற்பத்தியை சீரான நிலைக்கு கொண்டு வருவர். லாபம் சுமாராக இருக்கும். வியாபாரிகள் சுமாரான விற்பனை அமைந்து ஓரளவு லாபம் பெறுவர். சரக்கு கிட்டங்கியில் உரிய பாதுகாப்பு செய்ய வேண்டும். பணியாளர்கள் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத நிலை இருக்கும்.குடும்பப் பெண்கள் கணவரின் பேச்சு, செயலில் குறை காணும் போக்கு தென்படுகிறது. இதை தவிர்த்தால்தான் ருத்து வேறுபாடு வராமல் இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் மட்டுமே கடன் பெறுகிற சூழ்நிலையை தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் பெற்ற மதிப்பை இழக்கும் சூழ்நிலை இருக்கிறது. விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் மருத்துவசெலவு அதிகரிக்கும். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி பெறலாம்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் மங்கல நிகழ்வு உண்டாகும்.
உஷார் நாள்: 14.3.13 மதியம் 2.15 முதல் 16.3.13 இரவு 12.21 வரை மற்றும் 10.4.13 இரவு 9.53 முதல் 13.4.13 காலை 7.46 வரை வெற்றி நாள்: மார்ச் 31, ஏப்ரல் 7 நிறம்: சிமென்ட், இளஞ்சிவப்பு எண்: 4, 7
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »