பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று (11ம் தேதி) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மூலமண்டபம் அருகில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும், மாசி மாத அமா வாசை அன்று, மயானகொள்ளை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதை முன்னிட்டு, இன்று 11ம் தேதி, திங்கட்கிழமை, மயானகொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது.
விழாவினை முன் னிட்டு, ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி, தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், தேர் இழுத்தல், என, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். இரவு கோயில் வளாகத்தில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது.