பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
காஞ்சிபுரம்:உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில், மஹா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. பெரும்பாலான சிவன் கோயில்களில், காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனைகள் நடந்து வந்தன. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மஹா சிவராத்திரி நாயகன் சிவனை வணங்கிச் சென்றனர். மஹா சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் கைலாசநாதருக்கு நேற்று காலை, 7:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதானை நடந்தது. பிரசாதம் இதற்காக, காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோயிலில் சென்று வழிபட்டனர். இதனால் கோயில் வளா கமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிலர் அன்னதானம் வழங்கி வந்தனர். அவற்றுடன் குடிநீர் பாக்கெட்களும் வினியோகம் செய்தனர். சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்கள் பிரசாதத்தை, வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த தொன்னையை வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் போடாமல், வளாகத்தில் ஆங்காங்கே வீசினர். இதுதவிர பாரம்பரிய சின்னங்கள் அருகே அகல் விளக்குளை ஏற்றினர். இதனால், சிற்பங்கள் மீது புகை படிந்தது. இது வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தியது.