திருவள்ளூர்:கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமாக, 836 கோயில்கள் மற்றும், 12 மடங்கள் உள்ளன. இக்கோயில்களில் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளன. மேற்கண்ட கோயில்களில், 29 கோயில்களின் பாதுகாப்பு பணிக்கு, காவலர்கள் இல்லாத காரணத்தால், பாதுகாப்பு காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு, 60 வயதிற்கு உட்பட்டு, நல்ல உடல் தகுதியுள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரும், 15ம் தேதிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்