கடம்பத்தூர்:மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையார் தத்ரூப தரிசனம் நடைபெற்றது. பிரம்மா குமாரிகள் அமைப்பின், 77வது மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையாரின் தத்ரூப தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. கடம்பத்தூர், பஜார் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பிரம்மா குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த ருக்மணி, ஜெயலட்சுமி தலைமை வகித்தனர். கடம்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை போன்று, அதே அலங்காரத்தில் அண்ணாமலையாரின் தத்ரூப தரிசனம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.