சோழவரம்:விருப்பாட்சீஸ்வரர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சிவராத்திரி விழா நடந்தது. சோழவரம் அடுத்த, பூதூர் கிராமத்தில் விசாலாட்சி சமேதராய் வீற்றிருக்கும் விருப் பாட்சீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று, மாசி திங்கள், 26ம் நாள், மஹா சிவ ராத்திரியை முன்னிட்டு, விசேஷ ருத்ர அபிஷேகம், 108 சங்கு அபிஷேக ஆராதனையும், நான்கு கால அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. பூதூர், அருமந்தை, ஞாயிறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று, விருப் பாட்சீஸ்வரரை வழிபட்டு சென்றனர்.