ஓசூர்: ஓசூர், அண்ணா நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான சூறை திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபராதனைகள், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. விடிய, விடிய, நடந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். நேற்று காலை மயான சூறை விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். பல பக்தர்கள் அந்தரத்தில் பறக்கும் விமானத்தில் தொங்கியபடி சென்றும், கத்தி போடுதல், சாட்டையடி வாங்கியும் நேர்த்தி கடன் செலுத்தினர். அலகு ஊர்வலம் தாசில்தார் அலுவலக சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக கிருஷ்ணகிரி சாலையில் மயானத்திற்கு சென்றது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.