விக்கிரவாண்டி:வடகுச்சிபாளையத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது.விழாவையொட்டி முற் பகல் 11 மணிக்கு அங்காளம் மனுக்கு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் செய் தனர். பின்னர் மயான கொள்ளை உற்சவத்தை யொட்டி அம்மன் சிம்ம வாகனத் தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. பக் தர்கள் காளி, குறத்தி வேடம் தரித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.