இளந்துரை லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2013 11:03
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் இளந்துரை லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 21ம் தேதி நடந்தது. 48 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று மண்டலாபிஷேக நிறைவு பெற்றது. நேற்று காலை 7 மணிக்கு புண்யாகவாசம், அக்னி பிரதிஷ்டை , கலச ஸ்தாபனமும், 11 மணிக்கு புஷ்ப ஸ்தாபனம் மற்றும் புஷ்பயாகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு பெருமாளுக்கு அன்ன திருப்பாவாடை சாற்றப்பட்டு, வேதம் கூறி பக்தர்களுக்கு தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டது. யாகபூஜைகளை சவும்யநாராயணபட்டாச்சாரியார், பாஸ்கர் பட்டாச்சாரியார்கள் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.