பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஒசபுரம், 32 அடி உயரம் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி மற்றும் கரகதம்மாதேவி கோவில் கும்பாபிஷேக விழா வரும், 30ம் தேதி நடக்கிறது.
வரும், 29ம் தேதி மாலை, 5 மணிக்கு கங்கபூஜை ஸ்வஸ்திவேள் ஆவானம், தேவநாந்தி, அங்குரார்பணம், மிருத்திகாசங்கிரகணம், கலசஸ்தாபணம், வாஸ்துஹோமம், தேவதா ஆதிவாசகங்கள் ஆகியவை நடக்கிறது. வரும், 30ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு பிரதான தேவதாமூர்த்தி ஹோமம், கலாஹோமம், நேத்ரமிலனம் ஆகியவை நடக்கிறது. அதன் பின் மஹா கும்பாபிஷேக நடக்கிறது. மஹாமங்களார்த்தி, தீர்த்தபிரசாத வினியோகம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.
இரவு, 9 மணிக்கு ஸ்ரீ ராம ஆஞ்சநேய யுத்தம் என்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 31ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு பிரதான தேவதை அம்மனுக்கு கலாஹோமம், நேத்ராமிலனம், பிராண பிரதீஷ்டை கும்பாபிஷேகம், மகாமங்களார்த்தி, தீர்த்தபிரசாதம் நடக்கிறது.
மதியம், 3 மணி முதல் இரவு, 8 மணி வரை கங்க பூஜை, இரவு, 8.15 மணிக்கு ஸ்வாமி ஊர்வலம், சிறப்பு அலங்கார தீபராதனை நடக்கிறது.