வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 11:03
நெய்வேலி: வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகர் கைகளில் வேலுக்கு பதிலாக வில்லேந்தி நெற்றிக்கண்ணுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வேலுடையான்பட்டு கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், பல்வேறு வகையான வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய உற்சவமான காவடி அபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது. மறுநாள் 27ம் தேதி வாண வேடிக்கைகளுடன் தெப்ப உற்சவமும், 28ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் பழனி, மோகன், ஞானசேகரன், சுந்தரமூர்த்தி மற்றும் நெய்வேலி கான்டராக்டர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.