ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிர்களும் ஆன்மிகத்தில் ஈடுபடுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 01:03
உயிர் அனைத்திற்கும் பக்தி பொதுவானது. கஜேந்திரன் என்னும் யானை முதலையிடம் சிக்கித் தவித்தபோது, ஆதிமூலம் என்று அழைத்து மகாவிஷ்ணுவை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஈ முதல் யானை வரை அனைத்து வகையான பறவை, விலங்குகள் சிவனை வழிபட்டு முக்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. உதாரணமாக ஈங்கோய்மலையில் ஈசனை ஈ வழிபட்டது. சிலந்தியும், யானையும் திருவானைக்காவில் சிவபூஜை செய்து நற்கதி பெற்றன.