பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
நகரி: நகரி கரகண்டேஸ்வர கோவிலில், பங்குனி உத்திர உற்சவ விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்தூர் மாவட்டம், நகரி டவுனில் பழமை வாய்ந்த காமாட்சி சமேத கரகண்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின், 15வது ஆண்டு பங்குனி உத்திர உற்சவம் சிறப்பு பூஜைகள், கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19ம் தேதி கரகண்டேஸ்வர சுவாமி காமாட்சி சமேதரராக, நகரி மாட வீதியில் சூரிய பிரபையிலும் நேற்று (20ம் தேதி) சந்திர பிரபையிலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (21ம் தேதி) அதிகார நந்தி சேவையிலும், நாளை (22ம் தேதி)சேஷ வாகனத்திலும், 23ம் தேதி ரிஷப வாகனத்திலும், 25ம் தேதி ரத உற்சவத்திலும் உற்சவர் காமாட்சியுடன் எழுந்தருளுகிறார். பின்னர், திருக்கல்யாணம், வசந்த உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழா நிறைவை ஒட்டி, மூலவர் மற்றும் அனைத்து சன்னிதிகளில் சிறப்பு பூஜைக்கு பிறகு, கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.