Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐங்குறுநூறு (பகுதி-6) ஐங்குறுநூறு (பகுதி-8)
முதல் பக்கம் » ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு (பகுதி-7)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
04:03

ஐங்குறுநூறு - 31. செலவு அழுங்குவித்த பத்து

மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை யிறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே.  301

அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் அயினோ நன்றே
மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே.  302

புதுக்கலத் தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய இனிய வாக
எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.  303

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயல்நெடுங் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல் வல்லா தீமே.   304

களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்
சுடர்தொடிக் குறுமகள் இனைய
எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.  305

வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்
பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவொலி கூந்தல் மாஅ யோளே.  306

ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே
நன்றில் கொண்கநின் பொருளே
பாவை யன்னநின் துணைபிரிந்து வருமே.  307

பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்
கால் எறுழ் ஒள்வி தாஅய
முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.  308

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவுஅயர்ந் தனையால் நீயே நன்று
நின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே.  309

பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே.  310

ஐங்குறுநூறு - 32. செலவுப் பத்து

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்
காடுஇறந் தனரே காதலர்
நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே.  311

அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறிந்த குன்றே.  312

தெறுவது அம்ம நும்மகள் விருப்பே
உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க
நாடுஇடை விலங்கிய வைப்பின்
காடுஇறந் தனள்நம் காத லோனே   313

அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்
கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்
சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும்
நீளிடை அருஞ்சுரம் என்பநம்
தோளிடை முனிநர் சென்ற ஆறே.  314

பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்
பூசல் கேளார் சேயர் என்ப
விழைநெகிழ் செல்லல் உறீஇக்
கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே.  315

பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
தேரகல் அல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்
புல்லரை ஓமை நீடிய
புலிவழங்கு அதர கானத் தானே.   316

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ர நெஞ்சம் நீடிய பொருளே.   317

ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய
வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ
நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து
ஓடெரி நடந்த வைப்பின்
கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே.  318

கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
மண்புரை பெருகிய மரம்முளி கானம்
இறந்தன ரோநம் காதலர்
மறந்தன ரோதில் மறவா நம்மே.   319

முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ
முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்
கவலை அருஞ்சுரம் போயினர்
தவலில் அருநோய் தலைதந் தோரே.  320

ஐங்குறுநூறு - 33. இடைச்சுரப் பத்து.

உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
அலறுதலை ஓமை அம்கவட் டேறிப்
புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து
மொழிபெயர் பன்மலை இறப்பினும்
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.  321

நெடுங்கழை முனிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயினை முன்னே இனியே
ஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும்
தண்ணிய வாயின சுரட்திடை யாறே.  322

வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்
கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்
வெஞ்சுரக் கவலை நீந்தி
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே.  323

எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்
சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தம்பாய் கூந்தல் மாஅ யோளே.   324

வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்
போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்
வெம்பலை அருஞ்சுரம் நலியாது
எம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே.  325

அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது
மடமான் அமபினை மறியொடு திரங்க
நீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே
இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே.  326

பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்
சிறுகண் யானை நிலந்தொடல் செல்வா
வெயின்முளி சோலைய வேய்உயர் சுரனே
அன்ன ஆர்இடை யானும்
தண்மை செய்தஇத் தகையோன் பண்பே.  327

நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்
தண்ணிய வாயினும் வெய்ய மன்ற
மடவரல் இந்துணை ஒழியக்
கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே.  328

ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு
மறுதரு வதுகொல் தானே செறிதொடி
கழிந்துகு நிலைய வாக
ஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே.  329

வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே
அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும்
அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.  330

ஐங்குறுநூறு - 34. தலைவி இரங்கு பத்து.

அம்ம வாழி தோழி அவிழிணர்க்
கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கம்ழும் வெற்பின்
இன்னா என்பஅவர் சென்ற ஆறே.  331

அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறநில மன்ற தாமே விறன்மிசைக்
குன்றுகெழு கானத்ட பண்பின் மாக்கணம்
கொடிதே காதலிப் பிரிதல் 
செல்லல் ஐய என்னா தவ்வே.   332

அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு
யாஅம் துணைபுணர்ந்து உறைதும்
யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே.  333

அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே.  334

அம்ம வாழி தோழி நம்வயின்
நெய்தோ ரன்ன வெவிய எருவை
கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும்
கடுநனி கடிய என்ப
நீடி இவன் வருநர் சென்ற ஆறே.   335

அம்ம வாழி தோழி நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றதில் பொருட்பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.   336

அம்ம வாழி தோழி நம் வயின்
மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.  337

அம்ம வாழி தோழி சாரல்
இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்
மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்
பிரிவருங் காலையும் பிரிதல்
அரிதுவல் லுநர்நம் காத லோரே.   338

அம்ம வாழி தொழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் காதலவர் சென்ற நாடே.  339

அம்ம வாழி தொழி காதலர்
உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊரலர் எழவே.   340

ஐங்குறுநூறு - 35. இளவேனிற் பத்து.

அவரோ வாரார் தான்வந் தன்றே
குயிற்பெடை இன்குரல் அகவ
அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே.  341

அவரோ வாரார் தான்வந் தன்றே
சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே.  342

அவரோ வாரார் தான்வந் தன்றே
திணிநிலைக் கோங்கம் பயந்த
அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே.  343

அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை இஅள்முலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.  344

அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.  345

அவரோ வாரார் தான்வந் தன்றே
அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்
செங்கண இருங்குயில் அறையும் பொழுதே.  346

அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே.  347

அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே.  348

அவரோ வாரார் தான்வந் தன்றே
பொரிகால் மாஞ்சினை புதைய
எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.  349

அவரோ வாரார் தான்வந் தன்றே
வேம்பின் ஒண்பூ உறப்பத்
தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே.  350

 
மேலும் ஐங்குறுநூறு »
temple news
ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல். இந் நூலில் அமைந்த ... மேலும்
 
ஐங்குறுநூறு - 1. வேட்கைப் பத்து வாழி ஆதன் வாழி அவினிநெற்பல பொலிக பொன்பெரிது சிறக்கஎனவேட் டோளே யாயே ... மேலும்
 
ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து நீருறை கோழி நீலச் சேவல்கூருகிர்ப் பேடை வயாஅம் ஊரபுளிங்காய் ... மேலும்
 
ஐங்குறுநூறு - 11. தாய்க்கு உரைத்த பத்து. அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு ... மேலும்
 
ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar