பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2013 10:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில், பங்குனி விழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் நாளான நேற்று காலை, அம்மன் மகிஷாசூரமர்த்தனி அலங்காரத்துடன் வீதியுலா வந்தார். மாலை 5 மணிக்கு சின்னக்கடை தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் காளி வேடமிட்டு, ஆடியும் வந்தனர். பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இரவில் அம்மன் ரிஷபவாகனத்தில் கோயிலை அடைந்தார். மார்ச் 27ல் காலை அக்னிச்சட்டியும், இரவு 8 மணிக்கு, மின்சார ரதத்தில் அம்மன் சர்வஅலங்காரத்தில் நான்கு ரதவீதிகளில் சுற்றி வருவார். மார்ச் 29 காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்துள்ளனர்.