உடுமலை: உடுமலை தளி ரோட்டிலுள்ள காமாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 12ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாளை காலை 6:30மணிக்கு அம்மன் சன்னதியிலிருந்து திருமூர்த்தி மலைக்கு தீர்த்து எடுத்து வர செல்லுதல், மாலை 5:00 மணிக்கு சக்தி கும்பம் அழைத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கவுள்ளன. வரும் 27ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் மாவிளக்கு அழைத்தல், பொங்கல் பூஜை, அபிஷேகமும்; 28ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் உற்சவ மூர்த்திக்கு அபிஷேக சீர், காலை 9:00 மணிக்கு மேல் ஏகாம்பரேஸ்வரர் அழைப்பு, முளைப்பாலிகை அழைப்பு நிகழ்ச்சியும்; காலை 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் அம்மன் திருக்கல்யாணம் உற்சவமும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும்; இரவு 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் இடம் பெறுகின்றன. வரும் 29ம் தேதி மதியம் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும், 31ம் தேதி மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், முளைப்பாலிகை கங்கையில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.