திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிழந்தூர் பெருமாள் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2013 03:03
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத்தில் 5 வதுமான புகழ்பெற்ற ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. கோவிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து 25ம் தேதி திருக்கல்யாணமும், தாயார், பெரு மாள் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு நடந்தது. தேரோட்டத்தையொட்டி பூதேவி, ஸ்ரீதேவி தாயார் சமேத உற்சவ பெருமாள் தேருக் கு எழுந்தருள, 9 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனையர் சாமிநாதன் வடம் பிடித்திழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் 4 வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. அப்போது ஏராள மான பக்தர்களும், வணிகர்களும் பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்து சேவி த்தனர். பகல் 2 மணிக்கு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மாலை 4 ம ணிக்கு பெருமாள், தாயார் திருமஞ்சணமும் நடந்தன. 10ம் நாள் திருவிழா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பெருமாள் திருவடி திருமஞ்சணமும், புஷ்ப யாக சாற்று முறையும், இரவு 7 மணிக்கு வீ தியுலா காட்சி நடைபெறும்.