Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-11 நளதமயந்தி பகுதி-13 நளதமயந்தி பகுதி-13
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-12
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 பிப்
2011
04:02

ஏற்கனவே, சனீஸ்வரர்  தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தபோது, தாமதமாக வந்ததால், அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. மேலும், தமயந்தி தேவர்களைப் புறக்கணித்து, நளனுக்கு மாலையிட்டு விட்டதால், அவரது ஆத்திரம் அதிகரித்தது. தேவர்களை விட உயர்ந்தவன் ஒரு மானிடனா? என்று அவருக்கு பெரும் கோபம். இதனால், நளன் மீது வெறுப்பு அதிகரித்து அவனை ஒரு வழிசெய்ய நேரம்பார்த்துக் காத்திருந்தார். நள தமயந்தி 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். தங்கள் தேசத்து மக்களை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தனர். மக்களும் மன்னன் சொல் கேட்டு நடந்து கொண்டனர். மன்னனும், மக்களும் கருத்தொருமித்து வாழும் நாட்டில் பிரச்னையை உண்டுபண்ண சனீஸ்வரரால்  இயலாது. அவரும் 12 ஆண்டுகள் பொறுத்துப் பார்த்து, நளன் எங்காவது இடறமாட்டானா என்று கண்ணில் நல்லெண்ணெயை ஊற்றிக்கொண்டு காத்திருந்தார். உஹூம்...முடியவே முடியவில்லை.  ஆனால், மனிதன் என்பவன் ஒரு பலவீனன் ஆயிற்றே! நளனுக்கு அன்றைய காலைப்பொழுது மோசமாக விடிந்தது. அந்தப்பொழுது சனீஸ்வரருக்கு இனிய பொழுதாகி விட்டது. அன்று காலை நளமகாராஜன் தன் பூஜையறைக்கு கிளம்பினான். பூஜையறைக்குள் நுழையும் முன்பு கால்களை நன்றாக அலம்ப வேண்டும். பலர் இப்போது அதைச் செய்வதே இல்லை. இப்போது கோயிலுக்கு போகிறவர்கள் கூட அதைச் செய்வது இல்லை. திருப்பதி போன்ற ஒன்றிரண்டு கோயில்களில் உள்ளே நுழையும்போதே நம் குதிகாலளவு தண்ணீர் படும்படி ஓட விட்டிருக்கிறார்கள். மற்ற இடங்களில் தெப்பக்குளத்தில் போய் கால் கழுவக்கூட வழியின்றி வற்றிப்போய்விட்டது. இதனால், சனீஸ்வரன் அநேகர் வீடுகளில் நிரந்தர வாசம் செய்து வருகிறார். ஆம்...கடவுள் தந்த நீர்நிலைகளை அழித்ததால், சனீஸ்வரனின் பிடிக்குள் நம்மை நிரந்தரமாகச் சிக்கச் செய்து விட்டார்!

நளனுக்கும் தண்ணீரால் தான் கண்டம் வந்தது. அவன் கால்களைக் கழுவினான். ஆனால், சரியாக கழுவவில்லை. சிலர் காலின் முன்பகுதியில் மட்டும் தண்ணீர் ஊற்றிவிட்டு செல்வார்கள். இது தவறான நடைமுறை. கால் கழுவும் போது குதிகால் நனையுமளவு கழுவ வேண்டும். நளனும் இதே தவறைச் செய்தான். ஏதோ நினைவில் முன்கால்களைக் கழுவியவன் குதிகாலைக் கழுவவில்லை. இந்த சிறு தவறை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சனீஸ்வரர், நளனின் கால் வழியாக அவனது உடலில் புகுந்து பிடித்துக் கொண்டார். சனி என்றால் யாரும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. யார் ஒருவன் கடமை  தவறுகிறானோ அவனை மட்டுமே அவர் பிடிப்பார். சின்னத்தவறைக் கூட அவர் சகித்துக் கொள்ளமாட்டார். அந்த வகையில் 12 வருடம் காத்திருந்து நளனைப் பிடித்தார் சனீஸ்வர பகவான்.ஒருவன் அன்றாடம் நாராயணா, சிவாயநம, சரவணபவ என்று தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜபித்து வந்தால் அவனைத்துன்பங்கள் அணுகாது என்பது ஐதீகம். ஆனால், என்றாவது ஒருநாள் மறந்துபோனால் சனீஸ்வரர் அந்த நாளை தனக்கு இனியநாளாக்கிக் கொள்வார். அந்த நபரைப் போய் பிடித்துக்கொள்வார். ஒரு சிலர் நாத்திகம் பேசுகிறார்களே!  உலகத்திலேயே பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்களே! துன்பம் என்பதே அவர்களுக்கு இல்லையா என்று கேட்கலாம். நாத்திகவாதி தான் எந்நேரமும் இறைவனின் நினைப்பில் இருக்கிறான். சிவன் இல்லை, நாராயணன் இல்லை, முருகன் இல்லை, பிள்ளையார் இல்லை என்று அநேகமாக தினமும் எல்லாக்கடவுள்களின் பெயரையும் பலமுறை உச்சரித்து விடுகிறான். இல்லை என்று சொல்பவனும் தன் பெயரை உச்சரித்ததால் பலனைக் கொடுத்து விடுவார் பகவான். அதனால் தானோ என்னவோ. நாத்திகர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை போலும்! சனீஸ்வரர் ஒருவனை அண்டிவிட்டால் போதும். கணவன், மனைவியைப் பிரிப்பார், சகோதரர்களைப் பிரிப்பார்...இப்படி பலவகை பிரிவினைகளை உருவாக்குவார்.

நளதமயந்தி அவர்களாகப் பிரியமாட்டார்கள் என்று! ஏனெனில், ஒருவர் மேல் ஒருவர் அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். நளன் பிரிந்தால் தமயந்தி இறந்து போவாள். தமயந்தி பிரிந்தால் நளனின் உடலில் உடல் இருக்காது. இதனால் தான் ஏழரைச்சனி காலத்தில் உயிர்போகாது என்பார்கள். உயிரே போகுமளவு துன்பம் வருமே தவிர உயிரை அவர் அந்த சமயத்தில் பறிப்பதில்லை. தம்பதியரை பிரிக்கமுடியாது என்பதால், நளனுடைய அண்ணன் புட்கரன் என்பவன் மூலமாக துன்பம் கொடுக்க திட்டம்வகுத்தார் சனீஸ்வரர். இதற்காக அவனது நட்பையும் நாடிப்பெற்றார். புட்கரன் நெய்தல் நாட்டின் அரசனாக இருந்தான். அவனுக்கு ஆசை காட்டினார் சனீஸ்வரர்.புட்கரா! நீ உன் நாடு மட்டும் உனக்குப் போதுமென நினைக்கிறாய். உன்னிடம் அக்கறை கொண்ட நானோ, செல்வச்செழிப்பு மிக்க நிடதநாடும் உன்னிடம் இருந்தால் நல்லது என்று! அந்த நாட்டின் வளமனைத்தையும் எண்ணிப்பார். உன் நாட்டில் ஏற்கனவே உள்ள வளத்தையும் கணக்கிட்டுக் கொள். இரண்டையும் சேர்த்துக் கூட்டு. ஆஹா...பொருள் வளத்தில் உன்னை மிஞ்சும் மன்னர்கள் யாரும் உலகில் இருக்கமாட்டார்கள். எனவே, நிடதநாட்டை உன்னுடன் சேர்த்துக் கொள்ளேன், என்றார்.புட்கரன் சிரித்தார். சனீஸ்வரரே! நிடதநாட்டைக் கைப்பற்றுவதென்பது அவ்வளவு சுலபமா? என் சகோதரன் நளனின் படை வலிமை வாய்ந்தது. அவனை வெற்றிகொள்வது அத்தனை சுலபமல்ல.  அவனிடம் வம்பிழுத்து இருப்பதையும் இழந்து விடக்கூடாதே! என்றான் சற்று அச்சத்துடன்.  புட்கரா! அப்படியெல்லாம் நான்  விடுவேனா? கத்தியின்றி ரத்தமின்றி அவனதுதேசம் உனதாக ஒரு வழி சொல்கிறேன். சரியா? என்ற சனீஸ்வரரிடம், அது என்ன? என்று ஆவலுடன் கேட்டான் புட்கரன்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar