சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது பழமொழி. கடலில் இருந்து இயற்கை தரும் அரிய பொருள் இது. இதில் ஊற்றும் தண்ணீர் அமிர்தமாகி விடுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மரணத்தில் இருந்து காப்பாற்றும் சக்தி படைத்தது அமிர்தம். எனவே, சங்கால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து அத்தீர்த்தத்தைப் பருகினால் மரண பயம்நீங்கி தீர்க்காயுள் உண்டாகும். கார்த்திகை சோமவாரமான திங்கட்கிழமைகளில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் ஆரேச்õக்கியம், செல்வவிருத்தி, மகிழ்ச்சி உண்டாகும்.