மைசூரு அருகில் உள்ளது தலக்காடு வைத்தியநாதர் கோயில். சிவன் தன்னைத் தானே பூஜித்த தலம். இங்குள்ள சுவாமி சந்நிதியில், துவாரபாலகர் சிலை சிற்பத்திறனுக்கே சவால் விடும் விதத்தில் உள்ளது. இடப்பக்கம் உள்ள துவாரபாலகர் பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கிறது. சிற்பிகள் செதுக்கும் கற்களில் ஆண், பெண் என இருவகை கல் உண்டு. இது, ஆண் சிலையாயினும், பெண்கல்லால் ஆன சிலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிலையின் மார்பையும், வயிற்றையும் மட்டும் கவனித்துப் பார்த்தால், அதில் பசுவின் முகம் இருப்பதைக் காணலாம். இந்த சிலையைத் தட்டினால் பெண் கல்லுக்குரிய தாளநாதம் கேட்கும். இதை நாககுண்டல ஆச்சாரி என்ற ஸ்தபதி செதுக்கினார்.