பிறந்த தினத்தை ஆங்கில தேதிப்படி இப்போது கொண்டாடுகிறோம். ஆனால், அக்காலத்தில் ஒருவர் பிறந்த தமிழ்மாதமும், நட்சத்திரமும் வரும் நாளையே பிறந்தநாளாகக் கொண்டாடினர். இம்முறையில், பிறந்த நட்சத்திரமும் இடம் பெறுவதால், கோயிலில் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். சிலர் தமிழ் மாத நட்சத்திர நாளையும், ஆங்கில மாத தேதியிலுமாக இரு பிறந்தநாட்களைக் கொண்டாடுவதும் உண்டு. ஆன்மிக ரீதியாக நட்சத்திரப்படி கொண்டாடுவதே சிறந்தது.