பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
திருநெல்வேலி: பள்ளக்கால் பொதுக்குடி கோயிலில் இன்று (29ம் தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. அம்பை தாலுகா பள்ளக்கால் பொதுக்குடி பாணர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர், தேவி காமாட்சி அம்பாள், தேவி உச்சிமாகாளி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி ஆரம்பமானது. நேற்று காலையில் 2ம் கால யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலையில் சிறப்பு மகாலட்சுமி பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, இரவில் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (29ம் தேதி) காலையில் பிம்ப சுத்தி, ரக்சா பந்தனம், 4ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.