Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரையில் பக்தர்களுக்கு ... வேலூர் தங்கக்கோவிலில் ஸ்வர்ண லட்சுமி பிரதிஷ்டை! வேலூர் தங்கக்கோவிலில் ஸ்வர்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
10:04

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி திருக்கொடியேற்றுடன் துவங்கியது. ஏப்ரல் 9ம் தேதி முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை ஆரம்பமாகிறது.விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாளை அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், சந்தணக்காப்பு அலங்காரம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது.விழாவில் ஒவ்வொரு நாளும் சிம்ஹ வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், அன்னவாகனம் போன்றவற்றில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 8ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்தொட்டு இழுக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar