பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
05:04
தன்னிலும் எளியவர்களையும் மதிப்புடன் நடத்தும் குணமுள்ள மிதுனராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு சிரம பலன் தருகிற வகையிலான இடங்களில் உள்ளனர். கேது பகவான் ராசிக்கு பதினொன்றாம் இடமான ஆதாய ஸ்தானத்தில் அமர்வு பெற்று நற்பலன்களை தருகிறார். மே28ல், உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிற குரு, உங்கள் எண்ணங்களில் குழப்பமும், செயல்பாடுகளில் தாமதமும் ஏற்பட காரணமாக இருப்பார்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்காமல், உங்களிலும் முதிர்ந்த அனுபவஸ்தர்களிடம் யோசனை பெற்று எந்த திட்டத்தையும் செயல்படுத்துங்கள். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். சுமாரான பணவரவைப் பெறுவீர்கள். இளைய சகோதர, சகோதரிகளுடன் மனவருத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க அவர்களுடன் தேவையற்ற விஷயங்கள் பேசுவதைத் தவிர்க்கவும்.வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதி சுமாராக இருக்கும். தாயின் ஆசி, ஆதரவு கிடைத்து மனதில் நம்பிக்கை பிறக்கும். பூர்வசொத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நம்பகமானவர்களை நியமிப்பது நல்லது. சொத்து தொடர்பான ஆவணங்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.புத்திர ஸ்தானத்தில் ராகு, உச்சபலம் பெற்ற சனிபகவானின் அமர்வு உள்ளது. இதனால் புத்திரர்களின் செயல்பாடு மனம் வருந்த வைக்கும். தேவையற்ற சேர்க்கையால் அவர்களது உடல்நலமும் பாதிக்கப்படலாம். புத்திரர்களுக்கு ஆலோசனை சொல்வதிலும் கண்டிப்பதிலும் நிதான அணுகுமுறை நல்லது. எதிரிகளால் சிரமங்கள் ஏற்படும். உடல்நலம் சுமாராக இருக்கும். நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளலாம். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வுபெற அதிக செலவு, காலதாமதம் இருக்கும். ஏழாம் இடமான களஸ்திர ஸ்தானத்தை சனி, ராகு மூன்றாம் பார்வையாகவும், குரு பகவான் ஏழாம் பார்வையாகவும் பார்க்கின்றனர். இதனால்,கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். உறவினர்கள் வந்து சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் அளவுக்குப் போகும். எனவே, இருதரப்பும் விட்டுக்கொடுத்து சென்றால் தான் குடும்பம் அமைதியாக இருக்கும். விலை மதிப்பான பொருட்களை பயன்படுத்துவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.
தொழிலதிபர்கள்: கடந்த வருடங்களில் தொழில் ஓரளவு சீராக நடந்திருக்கும். அதில் கிடைத்த முன்னேற்றத்தை பொறுப்புணர்வுடன் பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஒப்பந்தம் செய்யும் போது, பல சலுகைகளைக் கொடுக்க வேண்டி வரும். இதனால் லாபம் சுமாராக இருக்கும். பாக்கிப்பணம் முயற்சியால் வசூலாகும். புத்திரர்களை நிர்வாகத்திற்கு கொண்டுவர விரும்புபவர்கள் உரிய பயிற்சியை தருவது அவசியம். அனுபவம் இல்லாத தொழிலில் கூட்டுசேர வரும் அழைப்புக்களை தவிர்ப்பதால், நஷ்டத்தில் இருந்து தப்பலாம்.
வியாபாரிகள்: விற்பனை குறையும் வாய்ப்பு தெரிவதால், நவீன தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதுதொடர்பான, கூடுதல் மூலதனத்திற்கு சொத்தின் பேரில் கடன் பெற வேண்டி வரும். நிர்வாகச் செலவு கடுமையாக இருக்கும். குடோன்களில் உரிய பாதுகாப்பு பின்பற்றுவது அவசியம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை கவனமுடன் பின்பற்றுவது நல்லது. வேலைகளை முடிக்க தாமதமாகும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பர். தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தின் முக்கிய செலவுக்காக கடன் பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், அதிக மூலதனமும் பணித்திறமையையும் உருவாக்கிக் கொள்வது அவசியம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், குடும்பச்சூழ்நிலை காரணமாக பணியில் தடுமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். வேலைப்பளு காரணமாக பணிகள் முடிய தாமதமாகும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வர். சேமிப்பு பணம் கரையும். உறவினர்களிடம் பேசுவதில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் மட்டுமே கடன் சுமை வராமல் தவிர்க்கலாம்.
மாணவர்கள்: பாடங்களைப் புரிந்து கொள்வதில் மந்தநிலை ஏற்படும். அதிக அக்கறையும் உரிய பயிற்சியுமே புரிதல் திறனை வளர்க்கும். படிப்புக்கான பணவசதி ஓரளவே இருக்கும். சக மாணவர்கள் கேலியான தொனியிலோ, இகழ்ந்தோ பேசினாலும், நீங்கள் பொறுமை காப்பது நல்லது. படிப்பை முடித்து வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதியான பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் கிடைத்த அரசியல் அனுபவங்களை பாடமாக கொண்டு செயல்படுவீர்கள். கட்சி மூலம் கிடைக்கும் பலன்களை சிலர் குறுக்கே புகுந்து தடுப்பார்கள். ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பொறுமையும் நிதானமும் வேண்டும். புத்திரர்களின் அவசர கதியிலான செயல்பாடு உங்களின் அரசியல் பணிக்கு தொந்தரவு தரும். எதிரிகள் தகுந்த சமயத்தில் இடையூறு செய்ய முயற்சிப்பர். கவனம். தலைமை நிர்வாகிகளின் சொல் கேட்பதும், அவர்களை நேரடியாக அணுகுவதும் நல்லது.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணிகளை ஆர்வமுடன் செயல்படுத்துவீர்கள். சராசரி அளவில் மகசூல் கிடைத்து உரிய பணவரவை பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் திருப்திகரமான அளவில் இருக்கும். நிலம் தொடர்பான விவகாரம் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு தாதமாக கிடைக்கும். சொத்தின் பேரில் பணக்கடன் பெறுபவர் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.
செல்ல வேண்டிய கோயில்: நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் பைரவர் கோயில். (தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில் வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., சென்றால் தகட்டூர்)
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால், சிரமங்கள் குறைந்து, சகல வளமும் பெறலாம்.
பரிகார பாடல்: பயிரவம் ஓங்கு நல்ல பத்தி மெய்ஞ்ஞான மில்லா
கயிரவம் அகற்றியாளும் காவலனாக வெல்லா
வுயிரவம் இன்றி வாழ வுதித்தருள் கீர்த்தி மேவும்
வயிரவ நாதனான வள்ளலை வணங்குவாமே!