Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: சுமாரான ஆண்டு கவனமாய் ... மிதுனம்: பிள்ளைகளால் தொல்லை சமாளியுங்க பிரச்னைகளை! மிதுனம்: பிள்ளைகளால் தொல்லை ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
ரிஷபம்: சூப்பர் வருஷம் பணம் கொட்டும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
05:04

கலகலப்பாக பேசி பிறர் மனம்  கவரும் ரிஷபராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் மிகுந்த அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். குரு, உங்கள் ராசியில் இருந்து மிதுனத்திற்கு, அதாவது இரண்டாம் இடத்தில், மே28ல் பெயர்ச்சியாகி தன் பங்கிற்கு அளப்பரிய நற்பலன்களை தருவார்.உங்கள் எதிர்காலம் வளம் பெற உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணவரவு பெறுவதில் இருந்த தாமதம் விலகி பலவகைகளிலும் வரத்து அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களின் அன்பு நிறைந்த வார்த்தையை மதித்து ஏற்பர். இளைய சகோதரர்களுக்கு இயன்ற அளவிலான உதவிகளைச் செய்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவீர்கள்.புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் அன்புடன் நடந்து கொள்வர். புத்திரர்கள் செயல்திறன் வளர்த்து படிப்பில் முதலிடமும், வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வ புண்ணிய பலன் முக்கிய தருணங்களில் துணைநின்று சிறப்பான நன்மைகளை பெற்றுத்தரும்.கடந்த காலங்களில் உங்களிடம் எதிரியாக செயல்பட்டவர்கள் வியத்தகு அளவிலான உங்கள் வாழ்வு கண்டு விலகிப்போவர். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பெறுவீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். நீண்டகால கடனில் பெரும்பகுதியை செலுத்தும் அளவிற்கு பணம் கொட்டும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களக்கு முயற்சி நிறைவேறி தகுந்த பணவரவும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் கிடைக்கும்.கணவன், மனைவி ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பெருகும். நண்பர்களின் பெருந்தன்மையான செயல்களை மதித்து பிரதிபலனாக அவர்களுக்கு தேவையான உதவி புரிவீர்கள். ஆயுள் ஸ்தானமாகிய ராசிக்கு எட்டாம் இடத்தை குருவும், குருவின் ஐந்தாம் பார்வை பெற்ற சனி, ராகுவும் பார்க்கின்றனர். இதனால் ஆயுள் அபிவிருத்தியும் சுமூக வாழ்வும் உருவாகும்.தந்தைவழி உறவினர்கள் வாழ்வில் சிறப்பான வளங்களை பெற்று உங்களிடம் பாசத்துடன் கவனித்துக் கொள்வர். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை தாராள செலவில் நடத்துவீர்கள்.

தொழிலதிபர்கள்: ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்த சிரம சூழ்நிலை மாறி இணக்கமான தன்மை உருவாகும். ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ள குருவின் ஒன்பதாம் பார்வையால், தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை படைப்பீர்கள். எதிர்பார்த்ததை விட அதிக லாபமும், உபரி வருமானமும் கிடைக்கும். பொருட்களின் தரமும் உற்பத்தி அளவும் அதிகரிக்கும். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். அரசு தொடர்பான உதவிபெற புதிய நண்பர்கள் அறிமுகமாகி, தேவையான உதவி செய்வர். உபதொழில் துவங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும்.

வியாபாரிகள்: மார்க்கெட்டில் போட்டி குறைந்து, இருப்பு பொருட்கள் விற்பனையாவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். விற்பனை அதிகரிக்கும். தாராள லாபம் பெறுவீர்கள். நீண்டகால கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். புதிய கிளை துவங்குகிற திட்டம் நிறைவேறும். புதிய வியாபாரம் துவங்க நினைத்துள்ளவர்கள், அதற்குரிய முயற்சியை இந்த ஆண்டில் எடுக்கலாம். குருவின் ஸ்தான பலம் கை கொடுக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையை வளர்த்து பணிகளை வேகமாக செய்து முடிப்பர். தாமதமான சலுகைகள் நிர்வாகத்தின் தனிக் கவனத்தினால் எதிர்பார்த்த அளவில் கிடைக்கும். சக பணியாளர்கள் நட்பு பாராட்டுவர். பணி சார்ந்த தொழில் நுணுக்கங்களை பிறருக்கு கற்றுக்கொடுக்க உங்களை நியமிப்பர். இதன்மூலம் உங்கள் கவுரவமும் பணவரவும் கூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் நேர்த்தியும் குறித்த கால அளவிற்குள் வேலையை முடிக்கும் சிறப்பு தன்மையும் பெறுவர். பதவி உயர்வு, வெகுமதி கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின், பாசம், சீரான பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். நகை, ஆடை வாங்க அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து உபரி பணவரவு பெறுவர். நவீன தொழில்நுட்பக் கருவிகள் வாங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். இளம்பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் நடக்கும்.

மாணவர்கள்: லட்சிய மனதுடன் படித்து திருப்திகரமான முன்னேற்றம் அடைவர். படிப்பிற்கு தேவையான பணவசதி தாராள அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் நட்புடன் நடந்துகொள்வர். பெற்றோருக்கு உறுதுணையாக நடந்து நற்பெயர் பெறுவீர்கள். படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு விரும்பியபடி கவுரவமான பணி கிடைக்கும். ஆன்மிக நம்பிக்கை வளர்ந்து தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள்: உங்களின் கடந்தகால சேவைகளுக்கு உரிய அங்கீகாரமும் நன்மையும் கிடைக்கும். ஆதரவாளர்கள் விசுவாசமாக நடந்து கொள்வர். எதிரிகளால் இருந்த தொந்தரவு விலகும். புதிய பதவி கிடைக்கும். வீடு, வாகனம், சொத்து வாங்க நல்யோகம் உண்டு. அரசியல் செல்வாக்கின் பயனை உங்கள் புத்திரர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வர். தாராள பணவரவும், தலைமையிடம் நற்பெயரும் கிடைக்கும்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் தாராள அளவில் கிடைக்கும். மகசூல் அதிகரித்து வருமானமும் எகிறும். கால்நடை வளர்ப்பில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய நிலம் வாங்குகிற முயற்சி நிறைவேறும்.

செல்ல வேண்டிய கோயில்: நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலம்  (திருக்கடையூர் அருகில்) திரிநேத்ர ஆஞ்சநேயர் கோயில்.

பரிகாரம்:  ஆஞ்சநேயரை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

பரிகார பாடல்: அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை
அளித்துக்காப்பான்

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar