Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: சோதனையை சாதனையாக்குங்கள்! கன்னி: வேலையில் கவனம் சுமாரான வருமானம்! கன்னி: வேலையில் கவனம் சுமாரான ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
சிம்மம்: சிறப்பான ஆண்டு மகிழ்ச்சி பொங்கும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
05:04

முடியாததையும் முடித்துக்காட்டும்  சிம்மராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு, ராசிக்கு மூன்றாம் இடத்தில் நல்ல பலன்களைத் தரும் இடங்களில் உள்ளனர். மே28ல், 11ம் இடத்தில், ஆதாய ஸ்தானமாகிய மிதுனத்தில் குரு அமர்வு பெறுகிறார். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும். புகழ் ஸ்தானத்தில் இடம்பெற்ற ராகுவும், சனியும் உங்களின் ஒவ்வொரு செயலையும் அதிக சிறப்புள்ளதாக மாற்றி நிலைத்த புகழை பெற்றுத்தருவர். இதற்கு குருபகவானின் ஐந்தாம் பார்வையும் உதவும்.உங்கள் மதிநுட்பம் நிறைந்த பேச்சு நண்பர், உறவினர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுத்தரும். வீடு, வாகனம் புதிதாக வாங்குகிற நல்யோகம் உண்டு. தாயின் ஆசி கிடைத்து மனமகிழ்ச்சி பெறுவீர்கள். புத்திரர்கள் சேர்க்கை சகவாசத்தினால் படிப்பில் பின்தங்கிய நிலை மாறும். அவர்களது ஞாபகத்திறன் வளரும்.தமக்குரிய பொறுப்பை உணர்ந்து படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவீர்கள்.பூர்வ சொத்தில் பெறுகிற பணவரவின் அளவு அதிகரிக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். எனினும், உணவு விஷயத்தில் கவனம் தேவை. எதிரிகள் உங்கள் செயல்களில் குறுக் கிடாமல் விலகுவர். கடன்கள் தொந்தரவு தராது.கணவன், மனைவி ஒற்றுமையாகச் செயல்பட்டு குடும்பநலன் பாதுகாத்திடுவர். மங்கல நிகழ்வு, சுபச்செலவு உருவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு முயற்சி இனிதாக நிறைவேறும். ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்டு புதிய அனுபவம் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் உங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி தமக்குரிய பொறுப்பை உணர்த்துவர். தொழில் சார்ந்த வகையில் அபிவிருத்தி பணிகளை தாராள செலவில் மேற்கொள்வீர்கள். முயற்சிகளுக்கான பலன் முழுமையாக கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பலவகையிலும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். இளசுகளுக்கு குரு பெயர்ச்சிக்குப்பிறகு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: உற்பத்தி, பொருட்களின் தரம் அதிகரிக்கும். இதனால் அதிக ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் அதிகமாகும். பணியாளர்கள் கேட்ட சலுகையைத் தந்து உற்பத்தியை மேலும் அதிகமாக்குவீர்கள். நிறுவனத்தின் மதிப்பு, மரியாதை உயரும். புதிய இயந்திரம், தொழில் உபகரணம் வாங்குவீர்கள். உபதொழில் துவங்க அனுகூலம் உண்டு.

வியாபாரிகள்: வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி அதிக விற்பனையும் நல்ல லாபமும் நற்பெயரும் பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைத்து மூலதன தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும். புதிய கிளை துவங்க விரும்புபவர்களுக்கு அத்தனையும் எளிதாக வந்து சேரும். சக தொழில் சார்ந்தவர்களுடன் சரக்கு பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையாக செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். பாராட்டு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக பணியாளர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டுவர். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பணித்திறமையை வளர்க்க புதிய தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல யோகமுண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையை நன்கு பயன்படுத்தி வேலைகளை விரைவாக செய்து முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் மற்றும் உறவினர்களுடன் பாசத்துடன் நடந்து கொள்வர். தம்பி, தங்கையின் திருமணம் நல்லவிதமாக நடைபெற இயன்ற உதவி செய்வீர்கள். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை அதிகரிப்பர். தாராள பணவரவும் சேமிப்பு உயர்வதுமான நன்னிலை உண்டு. புதிய தொழில் உபகரணம் வாங்குகிற முயற்சி நிறைவேறும்.

மாணவர்கள்: படிப்புக்கு தேவையான பணவசதி திருப்தியான அளவில் கிடைக்கும். முழு முயற்சியுடன் படித்து திருப்திகரமான தேர்ச்சிவிகிதம் பெறுவீர்கள். ஆசிரியர், பெற்றோரின் பாராட்டு கிடைக்கும். சக மாணவர்கள் சுமூக நட்புடன் நடந்துகொள்வர். படித்து முடித்து, வேலைபெறமுயற்சிப்பவர்களுக்கு கவுரவமான வகையில் பணி கிடைக்கும். சிலர் தனித்திறமை நிறைந்த செயலுக்காக பாராட்டு, புகழ் பெறுவர்.

அரசியல்வாதிகள்: சேவை மனப்பான்மை அதிகரித்து ஆதரவாளர்களின் வாழ்வு வளம்பெற தகுந்த பணிபுரிவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எதிரிகள் உருவாக்குகிற கெடுசெயல் பலமிழந்து போகும். புத்திரர்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டு, உங்கள் அரசியல்பணிக்கு கூடுதல் மதிப்பை உருவாக்குவர். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். பணவரவும் உண்டு.

விவசாயிகள்: தாராள மகசூல் கிடைத்து சந்தையில் கூடுதல் விலை கிடைக்கப்பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் உபரி வருமானம் உண்டு. புதிய நிலம் திட்டமிட்டபடி வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும்.

செல்ல வேண்டிய கோயில்: கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் துர்க்கை கோயில்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் செயல்களில் அதிக வெற்றி கிடைக்கும்.

பரிகார பாடல்: நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்ற
ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar